பிரபல ரீஜென்ட் செவன் சீஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த சொகுசுக் கப்பல் பயணத்தை அறிவித்துள்ளது. 140 நாட்கள் நீடிக்கும் இந்தச் சுற்றுலாவில் நீங்கள் யோசிக்காத பல வசதிகளைக் கூட ரீஜென்ட் செவன் சீஸ் கொடுக்கிறது. ஆனால், இதன் டிக்கெட் விலையைக் கேட்டால் தான் நமக்குத் தலை சுற்றுவதாக இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் பொதுமக்கள் புதுப்புது விஷயங்களைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றுவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
சொகுசுக் கப்பல் சுற்றுலா
இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்று வகைச் சுற்றுலா தான் சொகுசுக் கப்பல் சுற்றுலா.! பொதுவாக நாம் ஒரு தொலைதூர இடத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் விமானமே பிரதான சாய்ஸ்ஸாக இருக்கும். அதாவது நாம் விமானத்தில் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புவோம். ஆனால் சொகுசுக் கப்பல்களில் சுற்றுலா செல்லும்போது பிளானே வேறு.. அதாவது நாம் அந்த இடத்திற்குச் சொகுசுக் கப்பலில் பயணிப்பதே கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா போலத் தான் இருக்கும். அந்தளவுக்குச் சொகுசு கப்பல்கள் பிரம்மாண்டமாக இருக்கும்.
இதற்கிடையே ரீஜென்ட் செவன் சீஸ் நிறுவனம் என்ற நிறுவனம் தான் உலக வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு பயணத்தை அறிவித்துள்ளது. 2027ல் ஆரம்பிக்கும் இந்த டூர் மொத்தம் 170 நாட்கள் இருக்குமாம். 40 நாடுகள் வழியாக 71 துறைமுகங்களைக் கடக்கும் இந்தச் சுற்றுலா அமெரிக்காவின் மியாமியில் தொடங்குகிறது. “வேர்ல்ட் ஆஃப் ஸ்ப்ளெண்டர்” (World of Splendor) என்ற பெயரில் அட்டகாசமான சுற்றுலா திட்டத்தை ரீஜென்ட் செவன் சீஸ் அறிவித்துள்ளது.
தலை சுத்துது
ஆனால், இதற்குக் கட்டணத்தைக் கேட்டால் தான் நமக்கு தலையே சுற்றுகிறது. இந்த முழுச் சுற்றுலாவுக்கு ஆரம்ப விலை கட்டணமே ரூ.80 லட்சமாம். அதிகபட்சமாக ரீஜென்ட் சூட்டிற்கு ₹7.3 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. உலகில் இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த சொகுசுக் கப்பல் பயணமாக இது கருதப்படுகிறது.
என்னென்ன வசதிகள்
ரூ.7.3 கோடி கொடுத்து நீங்கள் ரீஜென்ட் சூட் டிக்கெட் எடுத்தால் நீங்கள் சுற்றிப் பார்க்கச் செல்லும் இடங்களுக்கு உங்களுக்கென தனியாக கார் மற்றும் டிவைரர் என எல்லாமே கிடைக்கும். மேலும், உங்களுடைய ரூம் 4,000 சதுர அடி கொண்டதாக இருக்கும். 4,000 சதுர அடி என்றால் அது கிட்டத்தட்ட இரு டென்னிஸ் மைதானங்களுக்குச் சமமாகும். மேலும், ரூமிலேயே ஸ்பா உட்பட மிரள வைக்கும் வசதிகளும் இதில் இருக்கிறது.
இந்தப் பயணத்தில் விருந்தினர்கள் ஆறு கண்டங்கள் வழியாக 35,668 கடல் மைல்கள் (66,057 கி.மீ) பயணம் மேற்கொள்வார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி, சிங்கப்பூர், மாலிபு மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, அந்த ஊர்களைச் சுற்றியும் பார்ப்பார்கள்.
இந்தியாவில் 4 ஸ்டாப்
அமெரிக்காவின் மியாமியில் தொடங்கும் இந்தப் பயணம் 170ஆவது நாள் மீண்டும் நியூயார்க் வந்தடையும். அவ்வளவு காலம் என்னால் கப்பலில் இருக்க முடியாது எனச் சொல்வோர் 126ஆவது நாள் ரோமில் இறங்கிக் கொள்ளலாம். மேலும், இந்தக் கப்பலில் நீங்கள் புக் செய்தால் உங்கள் இருப்பிடத்தில் இருந்து மியாமிக்கு வரும் விமான டிக்கெட்டையும் கூட அவர்களே புக் செய்து கொடுத்துவிடுவார்களாம்.