No menu items!

ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடம்!

ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடம்!

மகளிர் சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 735 புள்​ளி​களு​டன் ஒரு இடம் முன்​னேறி மீண்​டும் முதலிடத்தை பிடித்​துள்​ளார். முலான்​பூரில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் மந்​தனா 63 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​திருந்​தார்.

இதன் மூலம் அவர், தரவரிசை​யில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். மந்​தனா முதன்​முதலில் 2019-ம் ஆண்​டில் ஒரு​நாள் போட்​டிகளுக்​கான தரவரிசை​யில் முதலிடத்​தைப் பிடித்​திருந்​தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்​டில் 2-வது முறை​யாக முதலிடத்தை அடைந்​துள்​ளார். இங்​கிலாந்​தின் நாட் ஸ்கைவர்​-பிரண்ட் 731 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்​திய அணி​யின் மற்​றொரு தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவல் 4 இடங்​கள் முன்​னேறி 42-வது இடத்தை பிடித்​துள்​ளார். அவர், ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான முதல் ஒரு​நாள் போட்​டி​யில் 64 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதே ஆட்​டத்​தில் 54 ரன்​கள் சேர்த்த ஹர்​லின்

தியோல் தரவரிசை​யில் 43-வது இடத்​தில் உள்​ளார்.

ஆஸ்​திரேலிய அணி​யில் இடது வீராங்​க​னை​யான பெத் மூனி 3 இடங்​கள் முன்​னேறி 5-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...