No menu items!

அமெரிக்காவை கதறவிட்ட ரஷ்யா

அமெரிக்காவை கதறவிட்ட ரஷ்யா

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு சீராக உள்ளது. அமெரிக்கா அதனை தடுக்க நினைத்தால் தோற்று போவீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மீது கோபமாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவரால் நிறுத்த முடியாததது தான். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரானதும் 24 மணிநேரத்தில் போரை நிறுத்துவதாக கூறினார். ஆனால் அதிபராகி 8 மாதங்கள் கடக்கும் நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அவர் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் நட்பாக உள்ளது. இருநாடுகளும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீத வரி போட்ட டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீத வரி விதித்தார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா தான் போரை முன்னெடுக்க உதவுகிறது. இதனால் இது இந்தியாவின் போர் என்று டிரம்ப் விமர்சனம் செய்தார். அதோடு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார்.

ஆனால் நம் நாடு கேட்கவில்லை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்து உள்ளது. இதனால் டென்ஷனாகி உள்ளார் டிரம்ப். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா, சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகளையும் வரி விதிக்க வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்தியா-ரஷ்யா உறவை யாராலும் தொட முடியாது என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க இந்தியாவுக்கு தொடர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இப்போது நேட்டோ மூலமும் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. எவ்வளவோ அச்சுறுத்தல் இருந்தும் இந்தியா உறுதியுடன் நிற்கிறது. இந்தியா-ரஷ்யா உறவை சிதைக்க நினைக்கும் எந்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் தான் முடியும்.

இந்தியா-ரஷ்யா நட்பு பல ஆண்டுகளாக வலிமை அடைந்து வருகிறது. நட்பு, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல விஷயங்களில் இந்த நட்பு வேரூன்றி இருக்கிறது. தொடர்ந்து இரு நாட்டின் நலன்களுக்கும் இந்த உறவு முன்னுரிமை அளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யா மீது இந்தியா கொண்ட நம்பிக்கை, இந்தியா மீது ரஷ்யா கொண்ட இந்த நம்பிக்கையால் அமெரிக்கா கதற தொடங்கி உள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் உள்பட அமெரிக்க அமைச்சர்கள், வர்த்தக ஆலோசகர்கள் தொடர்ந்து கதறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...