மலை கிராமம் ஒன்றில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மலை உச்சியில் மயில் அகவல் கேட்பது என்பது அந்த கிராமத்தின் சுபிக்ஷத்தின் குறீயீடாக பார்க்கப்படுகிறது. அதோடு மலையில் ஜோதி தெரிவதும் அதைத்தொடர்ந்து கிராமத்தின் மகிழ்ச்சி வெளிப்படுதுவதும் காலகாலமாக நடக்கிறது.
ஒரு நாள் மலையிருந்து விழும் பெரும் பாறை இரண்டாக பிளந்து கிராமத்தின் ஒரு பகுதியில் தனித்தனியே நிற்கிறது. இதில் சிறிய பாறை, பெரிய பாறை என்று கிராமம் இரண்டாக பிரிந்து நின்று வணங்குகிறது. கூடவே தீண்டாமையும், ஜாதிய வன்மமும் சேர்ந்து வளர்ந்து நிற்கிறது.
ஒரு நாள் காளி வெங்கட்குடித்து விட்டு இறந்து போகிறார். ஆனால் அவர் உடம்பில் தெய்வம் வந்து குடியேறியதாக பூசாரி சொல்கிறார்கள். இதனால் காளி வெங்கட் உடலை எங்கள் கிராமத்தில் வங்க வேண்டும் என்று இரண்டு ஊரும் மல்லுக்கு நிற்கிறார்கள். இதனால் என்ன நடக்கிறக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். கதை, திரைக்கதை, வசனம் மணிகண்டன்.
அர்ஜுன் தாஸ் கிராமத்தின் மாட்டுக்கு லாடம் அடிக்கும் வாலிபனாக வருகிறார். அவரது உடல் மொழி, குரல் ஒலி எல்லாம் கதாபாத்திரத்திற்கு பொருந்தாமாக அமைந்திருக்கிறது. அவரும் பாத்திரம் தன்மை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நண்பரான காளி வெங்கட்டை தோளில் சுமந்து வரும் காட்சியில் நெகிழ வைக்கிறார். கிராமத்து மக்களிடம் இருக்கும் தீண்டாமையை போக்க அவர் எடுக்கும் அதிரடி முடிவு கைதட்டல் பெறுகிறது. அர்ஜுன் தாஸ் கதை தேர்வு செய்யும் விதம் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக அவரை நகர்த்தும். அஜித் படத்திலும் திறமை காட்டி, கிராமத்து கதையிலும் தன்னால் சக்ஸஸ் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
காளி வெங்கட் அமைதியாக வந்து அலப்பறை செய்கிறார். அவரது பாத்திரம் உருவாக்கம், கையாண்டவிதம் ஆட்சேபனைகுரிய வகையில் இருந்தாலும் அடைப்படை காரணம் சாதிய கொடுமைக்கு எதிராக இருப்பதால் மன்னிக்கலாம்.
ஒரு கிராமத்திற்கு சிங்கம்புலி தலைவர், இன்னொரு கிராமத்திற்கு கிச்சா ரவி இருவரும் சின்னச்சின்ன விஷயங்களும் மோதிக்கொள்வது சிரிப்பை வரவழைக்கிறது. ஜோதி தெரிவதற்காக அர்ஜூன் தாஸ் நாயகி சிவாத்மிகா டீம் போடும் திட்டமும் நாசரின் சதியும், கலெக்டர் அபிராமியின் திடீர் வருகையும் படத்தில் விறு விறுப்பை கூட்டினாலும் நகராமல் திணறுகிறது.
சாதிய பிரச்சனையால் கிராமங்கள் படும் அவஸ்தையும், அதனால் ஏற்படும் விளைவும் சரிவர சொல்லப்படவில்லை. இதனால் படம் நமக்கு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற மனநிலை மட்டுமே நிற்கிறது. இதனால் படத்தின் ஜீவன் இழந்து சாதாண நிலைக்கு போய் விடுகிறது. பலரது உழைப்பும் திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் வீணாக போகிறது. பாலசரவணன் உட்பட பல நட்சத்திரங்களை சரியாக பயன்படுக்தாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
படத்தில் டி. இமான் இசை பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு படத்திக்கு கைகொடுத்திருக்கிறது.