No menu items!

பிரிட்டிஷ் யூடியூபரின் நேபாள கலவர  வீடியோ பதிவு

பிரிட்டிஷ் யூடியூபரின் நேபாள கலவர  வீடியோ பதிவு

நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டது.

இந்த சூழலில் அங்கு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கலைந்து செல்லும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும் இதற்கு பலன் இல்லாமல் போனது. இந்நிலையில், இந்த போராட்டம், இளைஞர்கள் மீதான தாக்குதல், இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதல் என பல கோணங்களில் ‘நேபாள வன்முறை’ சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதை தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த யூடியூபர் ஹேரி.

அவரது இந்த வீடியோ உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அதற்கான காரணம் அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பக்கம் இருந்து இந்த வீடியோவை பதிவு செய்ததுதான். அதோடு இடையிடையே கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தப்பி செல்வது மற்றும் போராட்டக்காரர்களின் கருத்தையும் இதில் அவர் படம் பிடித்துள்ளார். பிரதான மற்றும் முதன்மை ஊடக நிறுவனங்கள் களத்தில் செய்ய தவறியதை அவர் தனி ஒருவராக செய்துள்ளார். அதனால் அதற்கு உலக அளவில் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

நேபாளத்தில் செப்.8-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். அன்றைய தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஹேரி, இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். ‘Wehatethecold’ என்ற யூடியூப் சேனலில் இதை அவர் பதிவு செய்துள்ளார். சுமார் 23 நிமிடங்களை ரன்டைமாக கொண்டுள்ளது இந்த வீடியோ.

போராட்டம் நடைபெற்ற இடம் அருகே சென்ற அவரிடம், ‘உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்’ என நேபாளத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்க, போராட்ட களத்தில் அவர்களுடன் சேர்ந்து இந்த வீடியோவை ஹேரி பதிவு செய்துள்ளார். இதற்காக களத்தில் சில மணி நேரம் அவர் இருந்துள்ளார். அவரது இந்த தீரமிக்க செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தப்பியது ஆகட்டும், போராட்டத்தின் போதே அதற்கான காரணத்தை கேட்டு பெற்றதும், முக்கிய கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு படை வாகனங்கள் மீதான தாக்குதல் என அனைத்தையும் ஹேரி இதில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது மில்லியன் கணக்கான பார்வையை கடந்துள்ளது.

நேபாள வன்முறை: நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. மேலும், நாட்​டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது. காத்​மாண்டு முழு​வதும் போலீ​ஸாரும், ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...