சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை உச்சி மாநாடு நடைபெற்ற அரங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமா் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடிய புகைப்படங்கள் வெளியாகின.
உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்த கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றுள்ளனர்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு ஒரே காரில் செல்வதாகவும் புதினுடனான உரையாடல் ஆழமானவை எனத் தெரிவித்துள்ளார்.