இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மிக விரைவில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் அறிவும், இந்தியாவின் திறமையும் இணைந்து மிகச் சிறந்த கூட்டாண்மையை உருவாக்க முடியும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான, செயற்கை நுண்ணறிவு, செமிக்ன்டக்டர், குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா மிகச் சவாலான மற்றும் லட்சிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஜப்பானிய வணிகத்தை தெற்கு உலகிற்கு கொண்டு வருவதற்கான ஊக்கியாக இந்தியா இருக்கும். இந்தியாவும் ஜப்பானும் இணைந்து ஆசிய நாடுகளின் இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கானதாக மாற்றும்.