No menu items!

இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா

இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா

மேற்​கத்​திய நாடு​கள் வெளி​நாட்​டினருக்​கான குடியேற்ற விதி​முறை​களை கடுமை​யாக்கி வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

இதுகுறித்து ரஷ்​யா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்​தி​யா​வில் திறமை​யான மனிதவளம் உள்​ளது. எனவே, ரஷ்ய சட்​டங்​கள் மற்​றும் விதி​முறை​களுக்கு உட்​பட்டு அந்​நாட்டு நிறு​வனங்​கள் அதிக அளவில் இந்​தி​யர்​களை பணி​யமர்த்தி வரு​கின்​றன.

குறிப்​பாக கட்​டு​மானம் மற்​றும் ஜவுளி துறை​களில் பெரும்​பாலானவர்​கள் பணி​யமர்த்​தப்​படு​கின்​றனர். இது​போல இயந்​திரங்​கள் மற்​றும் மின்​னணு துறை​களி​லும் இந்​தி​யர்​களுக்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. இதன் காரண​மாக தூதரக சேவை​களின் பணிச் சுமை அதி​கரித்து வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ரஷ்​யா​வுட​னான உறவு​கள் இந்​தி​யா​வின் வெளி​யுறவுக் கொள்​கை​யின் முக்​கிய தூணாக விளங்​கு​கிறது. சமீப கால​மாக ரஷ்​யா​வில் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இந்​திய தூதரகத்​தின் தரவு​களின்​படி, ரஷ்​யா​வில் உள்ள இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை 14 ஆயிரம் ஆகும். இதுத​விர, இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த சுமார் 1,500 ஆப்​கானியர்​களும் அங்கு வசிக்​கின்​றனர்.

ரஷ்​யா​வில் உள்ள மருத்​து​வம் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனங்​களில் 4,500 மாணவர்​கள் பயில்​கின்​றனர். இதில் 90% பேர் மருத்​து​வம் படிக்​கின்​றனர். மற்​றவர்​கள் பொறி​யியல், கணினி அறி​வியல், போக்​கு​வரத்து தொழில்​நுட்​பம், நிர்​வாகம், வேளாண்மை மற்​றும் நிதி மேலாண்​மை தொடர்​பாக பயில்​கின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...