No menu items!

ஏடிஆர் வெளி​யிட்​ட பணக்​கார முதல்​வர்​களின் சொத்​து பட்​டியல்

ஏடிஆர் வெளி​யிட்​ட பணக்​கார முதல்​வர்​களின் சொத்​து பட்​டியல்

ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு அண்​மை​யில் பணக்​கார முதல்​வர்​களின் பட்​டியலை வெளி​யிட்​டது.

​​​​​​​​​​​​​​கடந்த 1992-ம் ஆண்​டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்தை சந்​திர​பாபு நாயுடு தொடங்​கி​னார். இதற்​காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்​டுமே முதலீடு செய்​தார். பின்​னர் வங்​கி​யில் ரூ.50 லட்​சம் கடன் வாங்கி சித்​தூரில் பால் பண்​ணையை தொடங்​கி​னார். அவரது மனைவி புவனேஸ்​வரி நிர்​வாக இயக்​குந​ரானார்.

புவனேஸ்​வரி​யின் திறம்​பட்ட நிர்​வாகத்​தால் 2024-ம் ஆண்டு புள்​ளி​விவரத்​தின்​படி ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறு​வனம் ரூ.6,755 கோடி சாம்​ராஜ்ஜிய​மாக உயர்ந்​திருக்​கிறது.

இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர பாபு நாயுடு முதலிடத்தை பிடித்து உள்​ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.931.83 கோடி​யாக உள்​ளது. பால் வியா​பாரத்​தில் கோலோச்​சுவதன் மூலம் இந்​தி​யா​வின் பணக்​கார முதல்​வ​ராக அவர் உரு​வெடுத்​திருக்​கிறார்.

அவருக்கு அடுத்து அருணாச்சல பிரதேச முதல்​வர் பெமா காண்டு ரூ.332.56 கோடி யுடன் 2-வது இடத்​தில் உள்​ளார். கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​ ரூ.51.93 கோடி, நாகாலாந்து முதல்​வர் நெய்​பியு ரியோ​ ரூ.46.95 கோடி, ம.பி. முதல்​வர் மோகன் யாத​விடம் ரூ.42.04 கோடி, புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி​யிடம் ரூ.38.39 கோடி, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யிடம் ரூ.30.04 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் உள்​ளன.

தமிழக முதல்​வர் ஸ்டா​லின் 14-வது இடத்​தில் உள்​ளார். அவரிடம் ரூ.8.88 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் உள்​ளன. மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா கடைசி இடத்​தில் இருக்​கிறார். அவரிடம் 15 லட்​சம்​ சொத்​துகள்​ மட்​டுமே உள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...