No menu items!

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு அடுத்தபடியாக ‘இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா.

டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இவரது பேட்​டிங் சராசரி 43.61-ஆக உள்​ளது. டெஸ்ட் போட்​டிகளில் மொத்​தம் 16,217 பந்​துகளை எதிர்​கொண்​டுள்​ளார். 2023-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்​திய அணி​யில் அவருக்கு வாய்ப்​பு​ கிடைக்​க​வில்​லை. இந்​நிலை​யில்​தான் நேற்று தனது ஓய்வு அறி​விப்பை புஜாரா வெளி​யிட்​டுள்​ளார். டெஸ்ட் கிரிக்​கெட்​டுக்​காகவே வாழ்ந்து வரும் இவருக்கு இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​ (பிசிசிஐ) சரி​யான வாய்ப்​பு​ வழங்​க​வில்லை என ரசிகர்​கள் அதிருப்​தி தெரி​வித்து வரு​கின்​றனர்.

13-வது இந்​தி​யர்: இந்​திய அணிக்​காக 100 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடிய 13-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றவர் புஜா​ரா. மேலும், டெஸ்ட் போட்​டிகளில் அதிக ரன் குவித்த இந்​திய வீரர்​கள் பட்​டியலில் புஜா​ரா, 8-வது இடத்​தில் உள்​ளார்.

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக 25 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 2,074 ரன்​களை சேர்த்​துள்​ளார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 5 சதங்​கள் மற்​றும் 11 அரை சதங்​களைக் குவித்​துள்​ளார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக அவரது பேட்​டிங் சராசரி 49.38 ஆகும். இந்​திய அணிக்​காக 5 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் மட்​டும் விளை​யாடி உள்​ளார். மேலும் முதல் தர கிரிக்​கெட்​டில் 21,000 ரன்​களை கடந்​துள்​ளார்.

ஓய்வு குறித்து சேதேஷ்வர் புஜாரா கூறிய​தாவது: இந்​திய அணி​யின் சீருடையை அணிந்து கொண்​டு, தேசிய கீதம் பாடி, ஒவ்​வொரு முறையும் மைதானத்​தில் களமிறங்கிய போது என்​னுடைய சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்த முயல்​வேன். இந்த உணர்வை வெறும் வார்த்​தைகளால் வெளிப்​படுத்த முடி​யாது. அனைத்து நல்ல விஷ​யத்​துக்​கும் ஒரு முடிவு உண்டு என எல்​லோரும் சொல்​வதுண்​டு. அனைத்து வித​மான இந்​திய கிரிக்​கெட்​டில் இருந்​தும் நான் ஓய்வு பெற்​றுக் கொள்​கிறேன். இதை மிகுந்த நன்​றி​யுடன் தெரி​வித்​துக் கொள்​கிறேன். நன்​றி.

இந்த விளை​யாட்டு எனக்கு இவ்​வளவு நல்ல விஷ​யங்​களை கொடுக்​கும் என்று நான் எதிர்​பார்க்​க​வில்​லை. எல்​லை​யற்ற வாய்ப்​பு​கள் எல்​லை​யற்ற அனுபவங்​கள், அன்​பு, பாசம் என அனைத்​தை​யும் இந்த கிரிக்​கெட் வழங்கி இருக்​கிறது. இவை அனைத்தையும் தாண்டி என் நாட்​டுக்​காக​வும் என் மாநிலத்​துக்​காக​வும் விளை​யாட வாய்ப்பு கிடைத்​ததை என்​றும் மறக்க மாட்​டேன்.

எனக்கு வாய்ப்பு வழங்​கிய பிசிசிஐ, சவு​ராஷ்டிரா கிரிக்​கெட் சங்​கம் என அனை​வருக்​கும் என்​னுடைய நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கின்​றேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் போட்​டிகளில் கொல்​கத்​தா, பஞ்​சாப்​, பெங்​களூரு, சென்​னை சூப்​பர்​ கிங்​ஸ்​ அணி​களில்​ இடம்​பெற்​றிருந்​தார்​ புஜா​ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...