தீபக் – ஹன்னா என்ற இந்திய – அமெரிக்க காதல் தம்பதியின் இன்ஸ்டாகிராம் பதிவு விடியோவை பலரும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் திருமணம் நடைமுறைகள் மீதான ஒரு விரிந்த பார்வையையும் இந்த விடியோ எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த விடியோ, இது நிச்சயமாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று விடியோவை பகிரப்பட்டுள்ளது.
அதாவது, தம்பதி இருவரும், திருமணத்துக்குப் பின் பலரும் தங்களிடம் எழுப்பும் மிக விநோதமான கேள்விகள் குறித்து இந்த விடியோவில் பகிர்ந்துள்ளனர். என்னைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, நீ எதிர்கொண்ட மிக விநோதமான கேள்வி என்ன என்று தீபக் தன்னுடைய மனைவி ஹன்னாவிடம் கேட்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பலரும், நாங்கள் திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா? என்று கேட்பார்கள் என்கிறார்.
நீங்கள் சந்தித்த விநோதமான கேள்வி என்ன என்று தீபக்கிடம் கேட்கிறார் ஹன்னா. அதற்கு தீபக் சிரித்தபடி, பலரும் எங்களை ஜோடியாகப் பார்க்கும்போது, உங்கள் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணமா? என்று கேட்பதுதான் என்கிறார்.
தொடர்ந்து அந்த கேள்விக்கு அவரே பதிலளிக்கிறார். இது எப்படிங்க சாத்தியம்? எனது பெற்றோர், அமெரிக்காவின் மிக்சிகன் நகரத்துக்கு வந்து எனக்காகப் பெண் தேடியிருப்பார்களா என்ன? இது முழுக்க முழுக்க காதல் திருமணம்தான் நண்பர்களே என்கிறார்.
பொதுவாக இந்திய திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமாக இருக்கும். இதில் மணமகளை அல்லது மணமகனை தேர்வு செய்வதில் பெற்றோரின் கை மேலோங்கி இருக்கும். தங்களுடைய சமுதாயம், குடும்பப் பின்னணி, வருமானம், சமுதாய அந்தஸ்து போன்றவற்றைப் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப்படும்.