No menu items!

மத்​திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த நடவடிக்​கைகள்

மத்​திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த நடவடிக்​கைகள்

12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது.

டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரி​சாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்​கப்பட உள்​ள​தாக தெரி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5, 12, 18 மற்​றும் 28 என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அல்​லது குறைந்த வரி விதிக்​கப்​படு​கிறது. அதே​நேரம், அத்​தி​யா​வசி​யமற்ற மற்​றும் ஆடம்பர பொருட்​கள் மிக உயர்ந்த வரி அடுக்​கின் கீழ் (28%) வரு​கின்​றன.

ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்​கு​களாக குறைக்​கு​மாறு அமைச்​சர்​கள் குழு​வுக்கு ஆலோ​சனை வழங்கி இருப்​ப​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் அறி​வித்​தது. ஜிஎஸ்டி வரிக் கட்​டமைப்​பில் ‘ஸ்​டாண்​டர்​டு’ மற்​றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று மத்​திய அரசு மாநில நிதி​யமைச்​சர்​கள் குழு​வுக்கு பரிந்​துரை வழங்கி உள்​ளது.

நாட்​டின் ஒட்​டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 65 சதவீதம்18% வரி வரம்​பின் மூலம் கிடைக்​கிறது. ஆடம்பர பொருட்​கள் மற்​றும் அத்​தி​யா​வசி​யமற்ற பொருட்​களுக்​கான 28% வரம்பு 11% பங்கு வகிக்​கிறது. 12% வரம்​பின் வரு​வாய் 5 சதவீத​மும் குறைந்​த​பட்ச வரி அடுக்​கான 5% வரம்​பின் வரு​வாய் 7 சதவீத​மும் பங்கு வகிக்​கின்​றன. கார்​கள் உள்​ளிட்ட ஆடம்பர மற்​றும் அத்​தி​யா​வசி​யமற்ற பொருட்​கள் மீது செஸ் வரி விதிக்​கப்​படு​கிறது.

முக்​கிய அம்​சங்​கள்

அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தத்​தில் 5, 18 என 2 அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும்.
28% வரம்​பில் உள்ள 90% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் 18% வரி வரம்​புக்கு மாற்​றப்​படும். இது​போல 18% வரம்​பில் உள்ளவற்​றில் 99 சதவீதம் 5% வரி வரம்​புக்கு மாற்​றப்​படும்.
புகை​யிலை உள்​ளிட்ட ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் சிறப்பு வரி​யாக 40% வசூலிக்​கப்​படும்.
பொருளா​தார நடவடிக்கை மற்​றும் நுகர்வை ஊக்​குவிக்​கும் வகை​யில் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தலை​மையி​லான ஜிஎஸ்டி கவுன்​சிலின் அடுத்த கூட்​டம் வரும் செப்​டம்​பரில் நடை​பெற உள்​ளது. இதில், மேற்​கண்ட ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து ஆலோ​சனை நடத்​தப்​படும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...