No menu items!

விரை​வில் சென்னையில் படகு ஆம்​புலன்ஸ்

விரை​வில் சென்னையில் படகு ஆம்​புலன்ஸ்

மழை வெள்ள பாதிப்பு பகு​தி​களில் இருந்து கர்ப்​பிணி​கள், நோயாளி​களை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்​புலன்ஸ் சேவை விரை​வில் தொடங்​கப்​பட​வுள்​ளது.

தமிழக சுகா​தா​ரத் துறை​யின் கீழ் செயல்​படும் 108 ஆம்​புலன்ஸ் சேவையை, இஎம்​ஆர்ஐகீரின் ஹெல்த் சர்​வீசஸ் நிறு​வனம் செயல்​படுத்தி வரு​கிறது.

தற்​போது 900-க்​கும் மேற்​பட்ட ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் உள்​ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்​பு​களின்​போது, அந்த வாக​னங்​களை இயக்க முடி​யாத சூழல் உள்​ளது. அதனால், 108 ஆம்​புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்​புலன்​ஸ்​ வாங்க முடிவு செய்​துள்​ளது. இதற்​கான திட்ட மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டு, அரசிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக 108 ஆம்​புலன்ஸ் சேவை​யின் மாநில செயல் தலை​வர் செல்​வகு​மார் கூறிய​தாவது: வடகிழக்​கு பரு​வ​மழை காலங்களில் ஏற்​படும் வெள்ள பாதிப்​பு​களில், மீனவர்​கள் உதவி​யுடன் படகு மூல​மாக நோ​யாளி​கள், கர்ப்​பிணி​கள் மீட்​கப்​பட்டு வருகின்​றனர்.

சிலருக்கு அவசர மருத்​துவ உதவி தேவைப்​படும்​பட்​சத்​தில், அந்​நேரங்​களில் மனிதர்​கள் மூல​மாக குறைந்​த​பட்ச முதலுதவி சிகிச்சை மட்​டுமே வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதனைத் தவிர்க்​கும் வகை​யிலும், நோ​யாளி​கள், கர்ப்​பிணி​களை அவர்​களின் இருப்​பிடத்​தில் இருந்​தே, ஆக்​சிஜன் உள்​ளிட்ட வசதி​களு​டன் மீட்​கும் வகையி​லான, படகு ஆம்​புலன்ஸ் சேவை தொடங்​கப்​பட​உள்​ளது.

அவசர​கால மற்​றும் முதலுதவி மருத்​துவ உபகரணங்​கள் உள்​ளடக்​கிய ஒரு படகு ஆம்​புலன்​ஸுக்கு ரூ.10 லட்​சம் வரை செல​வாகும். 5 படகு​களுக்​கு, ரூ.50 லட்​சம் செல​வாகிறது. இவை மும்பையைச் சேர்ந்த படகு ஆம்​புலன்ஸ் தயாரிக்​கும் நிறு​வனத்​திடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளன.

இதற்​காக, தமிழக அரசிடம் ஒப்​புதல் கோரப்​பட்​டுள்​ளது. அரசு ஒப்​புதல் அளிக்​கும்​பட்​சத்​தில், இந்​தாண்டு பரு​வ​மழை காலத்​திலேயே படகு ஆம்​புலன்ஸ் செயல்பட தொடங்​கும். இந்த படகு ஆம்​புலன்​ஸில் ஓட்​டுநர், மருத்​துவ உதவி​யாளர் மற்​றும் தீவிர சிகிச்​சைக்​கான அனைத்து வசதி​களும் இடம் பெற்​றிருக்​கும். வெள்ள பா​திப்பு ஏற்​படும் பகு​தி​களில் இந்த படகு ஆம்​புலன்​ஸ் பயன்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...