இந்தியாவில் வெளியான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது ஹாலிவுட் படமான ‘சூப்பர்மேன்’.
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கடந்த ஜூலை 11 அன்று வெளியான ‘சூப்பர்மேன்’ திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான ‘சூப்பர்மேன்’ படங்களின் வசூலை எல்லாம் இப்படம் முறியடித்துள்ளது.
படத்தின் மொத்த பட்ஜெட் 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் வெளியான இரண்டு நாட்களிலேயே இப்படம் 217 மில்லியன் டாலர் வசூலித்துவிட்டது. டிசி காமிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.