No menu items!

2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதி​முக ஆட்​சி – பழனி​சாமி

2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதி​முக ஆட்​சி – பழனி​சாமி

2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

விழுப்​புரம் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பிரச்​சா​ரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனி​சாமி,வானூர் தொகு​திக்கு உட்​பட்ட திருச்​சிற்​றம்​பலம் கூட்டு ரோட்​டில் பேசி​ய​தாவது: திமுக தேர்​தல் அறிக்கை​யில் 575 கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும் என உறு​தி​யளித்​தனர்.

அதில் 10 சதவீதத்​தைகூட நிறை வேற்​ற​வில்​லை. 98 சதவீதம் நிறைவேற்​றப்​பட்​ட​தாக தவறான தகவல்​களைத் தெரிவிக்​கின்​றனர். மாதந்​தோறும் மின் கட்​ட​ணம் கணக்​கீடு, சிலிண்​டருக்கு ரூ.100, கல்விக் கடன் ரத்​து, நீட் தேர்வு ரத்து என எந்த வாக்​குறு​தி​யை​யும் நிறைவேற்​ற​வில்​லை.

அதி​முக​வின் அழுத்​தத்​தால்​தான் மகளிருக்கு உரிமைத்​தொகை கிடைக்​கிறது. தேர்​தல் வர உள்​ள​தால் 30 லட்​சம் பேருக்கு உதவித்​தொகை வழங்க விதி​களை தளர்த்​தி​யுள்​ளனர். தேர்​தலுக்​குப் பிறகு, தகுதி இல்லை என்று கூறி உரிமைத்​தொகையை நிறுத்​தி​விடு​வார்​கள். வரி, கட்​டண உயர்​வால் மக்​களை பரிதவிக்​கச் செய்​துள்​ளனர்.

கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநி​தி, இன்​பநிதி என ஒரு குடும்​பத்​தினரின் ஆட்​சிக்கு 2026 தேர்​தலில் முற்​றுப்​புள்ளி வைக்க வேண்டும். திமுக​வின் மன்​னர் ஆட்சி தொடரக்​கூ​டாது. படிப்பு என்​றால் பழனி​சாமிக்கு கசக்​கும் என்று முதல்​வர் ஸ்டா​லின் விமர்​சித்​துள்​ளார். கல்வி எனது உயிர் மூச்​சு.

அதி​முக ஆட்​சி​யில் பல கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. ஆனால், விழுப்​புரத்​தில் தொடங்​கப்​பட்ட ஜெயலலிதா பல்​கலைக்​கழகத்தை ஸ்டா​லின் ரத்து செய்​து​விட்​டார். படிப்பை பற்றி உங்​களுக்கு (ஸ்​டா​லினுக்​கு) என்ன தெரி​யும்? நீட் தேர்​வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு அதி​முக ஆட்சி​யில் வழங்​கப்​பட்​ட​தால், 2,818 மாணவர்​கள் மருத்​து​வம் படித்துள்ளனர்.

பாஜக​வுக்கு அதி​முக அடிமை என்​கிறார் ஸ்டா​லின். அமலாக்​கத் துறை சோதனைக்கு பயந்து திமுக​வினர்​தான் நடுங்​கிக் கொண்டிருக்​கின்​றனர். அதி​முக எதற்​கும் அஞ்​சாத கட்​சி. அதி​முகவை ஒழிக்க மேற்​கொண்ட முயற்​சிகளை முறியடித்​துள்​ளோம். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக வென்​று, தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும்.

கூட்​ட​ணிக் கட்சிகளும் அதிக இடங்​களில் வெற்​றி​பெறும். நாடாளு​மன்ற மறு​வரைவு திட்​டத்​தால் தமிழகத்​தில் எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை குறைந்​து​ விடும் என்று கூறி, மத்​திய அரசு மீது ஸ்டா​லின் பழி​போடு​கிறார்.

தமிழகத்​தில் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறை​யாது என்று உள்​துறை அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். அதி​முக பிரச்​​சா​ரத்​துக்​கு மக்​கள்​ கூடும்​ கூட்​டத்​தை ​பார்​த்​து, ஸ்​டா​லினுக்​கு ஜுரம்​ வந்​துவிட்​டது. இவ்​​வாறு அவர்​ பேசி​னார்​. தொடர்ந்து, மயிலம், செஞ்சியில் பழனி​சாமி பிரச்​சார பயணத்தை தொடர்ந்​தார். இதில், வானூர் எம்​எல்ஏ சக்​கர​பாணி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...