வாசுதேவன் அன் பேமிலி என்று எழுதப்பட்ட மூன்று படுக்கை அறை கொண்ட வீடு சொந்தமாக வாங்க வேண்டும் என்பதே வாசுதேவன் சரத்குமார் ஆசை. மனைவி தேவயானி, சித்தார்த், மகள் ஆகியோருடன் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். எப்படி முயன்றாலும் குடும்பத்தின் செலுவுகளை மீறி சேமிக்க முடியாத வாழ்க்கைப் போராட்டம். மகன் சித்தார்த் பள்ளி, கல்லூரி, வேலை என்று எங்கு போனாலும் தோலிவியே சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாழ்க்கை மாறுகிறது. சரத்குமாரின் வீடு வாங்கும் கனவு அவர் காலத்தில் நடக்காமல், மகன் கையில் பொறுப்பை ஒப்படைக்கிறார். அப்பாவின் கனவு இல்லத்தை மகன் சித்தார்த் நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
சரத்குமார் வாசுதேவனாக நம்மோடு வாழ்ந்திருக்கிறார். அந்த முகம் அவ்வளவு சோகத்தையும் சொல்லி விடுகிறது. தன் டேளிபில் கம்ப்யூட்டர் இருப்பதை பார்த்து பதட்டமடைவதும் தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அந்தகாட்சியிலிருந்து படத்தின் இறுதி கட்டம் வரைக்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகனை திட்டவும் முடியாமல் அவன் தோல்வியை சகிக்கவும் முடியாமல் தடுமாறும் சூழல் பல தந்தைகளுக்கு வந்திருக்கும். அழகாக காட்டியிருக்கிறார். அடிச்சாதன் வயலன்சா அப்போ நானும் அப்படித்தானே என்று மனைவியிடம் கேட்பதும், ஈஆஈ கவிதையான இடங்கள் நிறைய இருக்கின்றன. சரத்குமாருக்கு இந்தப்படம் இன்னொரு சூர்யவம்சமாக இருக்கும்.
சித்தார்த் மாணவன் வயதிலிருந்து நாற்பது வயதுவரைக்குமான போராட்டத்தை நடிப்பில் காட்டி கைதட்டல் பெறுகிறார். மேலதிகாரியின் கன்னத்தில் விழும் அறை பல கம்பெனிகளில் எதிரொலிக்கும் மவுன வலி. தாழ்வு மனப்பான்மையையும், நம்பிக்கொண்ட மனதையும் முகத்தில் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பான இடங்கள். மகள் கதாபாத்திரம் பல வீடுகளில் உலவும் பாத்திரம்.
அதன் மூலம் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கு ஒரு பாலம் அமைத்திருக்கும் விதம் திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.
சொந்த வீடு இல்லையென்று தங்கை சொன்ன வார்த்தையின் வலியை தன் வாழ்நாள் முழுவதும் சரத்குமார் சுமந்து காட்டியிருப்பது இந்த படத்தின் பலம்.
வீட்டு புரோக்கராக யோகிபாபவை அளவாக நடிக்க வைத்திருப்பதும், வாடகை வீட்டு உரிமையாளராக ராமேஷ் வைத்தியாவை காட்டியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.
இப்படியான ஒரு கதை தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் அன்றாடம் நடக்கிறது. இதை அப்படியே திரைக்கு கொண்டுவந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரே குறை சரத்குமாரின் உடல் மொழியை காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் வித்தியாசப்படுத்தியிருக்க வேண்டும்.
தங்கை ஆர்த்தியாக வரும் மீத்தா ரகுநாத், சித்தார்த்தின் பள்ளித் தோழியாக, மிக அற்புதமாக நடிக்கக்கூடிய (‘Toby’ கன்னடப்படம்) சைத்ரா J. ஆச்சார் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
வாசுதேவனின் மனைவி சாந்தியாக நடித்துள்ள தேவயானி, கணவனுக்கு உண்மையில் கோபம் எதன் மீது எனச் சுட்டிக் காட்டும் ஓர் அற்புதமான வசனத்தில் கவனத்தை கவர்கிறார் ஸ்ரீகணேஏஷ். படத்தின் பெரிய பலம் திரைக்கதையும், வசனங்களும் தான்.
பல பேருக்கு தங்கள் குடும்பங்களை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு வரும்.