பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ், உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி சிறந்த உணவு வகைகள் கொண்ட 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவு வகைகள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொருத்து அந்த உணவு இருக்கும்.
அதில் கிரீஸ் 4.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகியவை முறையே அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளன.
துருக்கி, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
போலந்துக்கு 11 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது
பாரம்பரிய உணவுகளுக்கு பெயர்போன இந்தியா 4.42 புள்ளிகளுடன் 12 ஆம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான்(naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
ஐடிசி மௌரியாவில் உள்ள டம் புக்த், மாவல்லி டிஃபின் அறைகள், துன்டே கபாபி, லியோபோல்டு கஃபே மற்றும் ஸ்ரீ தாக்கர் போஜனலே ஆகியவற்றை சிறந்த உணவகங்களாகக் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. பெரு (14), லெபனான் (26), தாய்லாந்து (28), ஈரான் (41) ஆகிய உணவுக்கு பெயர்போன நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.