No menu items!

AI யால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

AI யால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

இப்போது உள்ள ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence – AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.

ஃபியூச்சரிஸம் (Futurism) ஊடகத்தின் அறிக்கையின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, திறமையான நிபுணர்கள் செய்து வந்த வேலைகளை தானியங்கி முறையில் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative sectors) கூட, குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த துறைகளில் அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளன..

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேஷன் காரணமாக.. அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை தொடக்கத்தில் நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அடிப்படையில், ஒரு காலத்தில் மனிதர்களால் கையாளப்பட்ட வேலையை இப்போது AI செய்வதால், பல பணிகள் மெதுவாக நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி , தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம் ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஐபிஎம் சுமார் 200 எச். ஆர் பணியிடங்களை AI அமைப்புகள் மூலம் மாற்றியது. அதாவது எச். ஆர் பணிகளான பணிகளுக்கு தகவல் அனுப்புவது, பணியாளர்கள் தகவல்களை சேகரிப்பது, பணியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது உள் ஆவணங்களை சோதனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருள் அமைப்பை அந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது. இது எச். ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் எச். ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஐபிஎம் சுமார் 200 எச். ஆர் பணியிடங்களை AI அமைப்புகள் மூலம் மாற்றியது. அதாவது எச். ஆர் பணிகளான பணிகளுக்கு தகவல் அனுப்புவது, பணியாளர்கள் தகவல்களை சேகரிப்பது, பணியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது உள் ஆவணங்களை சோதனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருள் அமைப்பை அந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது. இது எச். ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் எச். ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் கோடிங், டெஸ்டிங் செய்யக்கூடிய பணியாளர்கள், அதிக சம்பளம் வாங்கும்.. உயர் மேனேஜர் பொறுப்பில் உள்ளவர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் ஏஐ அமைப்புகளை அதிக அளவில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

உலகம் எங்கும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில், பெரிய நிறுவனங்கள் ஏஐ வருகையை காரணம் காட்டி, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. சமீபத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் கடுமையான பணி இழப்புகள் நடந்து உள்ளன.

மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன. அதிலும் அவர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறி உள்ளது. அந்த நிறுவனம் AI-சார்ந்த கோடிங் முறைக்கு தற்போது தீவிரமாக மாறி வருகிறது.

மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாஷிங்டன்னில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் நடந்து உள்ளன. முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக மாறி உள்ளதாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கோடிங் பணிகளை செய்யும் வகையில் சில ஏஐ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த ஏஐ கட்டமைப்புகள் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது. அதாவது கோடிங் செய்பவர்கள், அதை டெஸ்டிங் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...