No menu items!

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது.

முன்னதாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், கோலி தனது விருப்பத்துக்கு முன்னிலை கொடுத்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோலி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவுதூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னை செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தப் பாடங்களை நான் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வேன்.

வெள்ளை நிற ஆடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எளிதானது அல்ல. ஆனால், இந்தக் கடினமான முடிவை நான் சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் என்னால் இயன்றதை எல்லாம் கொடுத்துள்ளேன். பதிலுக்கு அது எனக்கு நான் எதிர்பார்க்காததை எல்லாம் தந்தது.

இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கு, என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி. என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

கோலியின் டெஸ்ட் பயணம்

விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். இதில் 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார். கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியில் கோலி 100 ரன்கள் எடுத்தார். ஜூலை 2023-க்குப் பிறகு கோலி டெஸ்ட்டில் எடுத்த முதல் சதமாக அது அமைந்தது. 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் 254 ரன்கள் எடுத்ததுதான் அவரது கரியர் பெஸ்ட் ஸ்கோர்.

கடைசி 2 வருடங்களாக அவரது சராசரி 32-ஐ த் தாண்டவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...