வாடிகன் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவராக அமெரிக்காவைச் சேர்ந்த பிஷப் ராபர்ட் பிரேவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
பொதுவாக, பொறுப்பிலிருந்த போப் உயிரிழந்துவிட்டால் சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்படும். அடுத்த போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அதே கறுப்பு நிற புகை வெளியிடப்படும் நிலையில் புதிய போப் தேர்ந்தெடுப்பட்ட பின்னர், அதன் அறிகுறியாகப் புகை போக்கியிலிருந்து வெள்ளை நிறப் புகை வெளியாகும். அந்த வகையில், சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் போப் பிரான்சிஸின் மறைவை அடுத்து, கருப்பு நிற புகை வெளியாகி வந்த நிலையில், நேற்று மாலை 6.07 மணிக்கு வெள்ளை நிற புகை வெளியாக தொடங்கியது.