டெல்லியில் டாப் கியரில் ஒரு உயர்நிலைக் கூட்டம் நடந்தது! பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி அனில் சவுஹான் மற்றும் ஆயுதப் படைகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பு! நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசல்! இதில் பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை… எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்!
“பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்வது? எங்கே தாக்குவது? எப்போது தாக்குவது? இந்த நடவடிக்கைகளின் முறை, இலக்கு, நேரம் – இதை ராணுவம் autonomy உடன், அதாவது சுதந்திரமாக, துணிச்சலாக முடிவெடுக்கட்டும்!” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர்! இது, பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இந்தியா எந்த அளவு உறுதியாக இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது!
இதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், NSG, BSF, CRPF, SSB உள்ளிட்ட டாப் பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது, உள்நாட்டுப் பாதுகாப்பிலும் இந்தியா இரும்புக்கரம் காட்டுவதை உணர்த்துகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச மீடியாக்களே (நியூயார்க் டைம்ஸ் உட்பட) ‘இந்தியா பதிலடி கொடுக்குமா? அது போர் ஆகிவிடுமா?’ என விவாதித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு… அதிர வைப்பதாக இருந்தது.
ராணுவ பலம்… இந்தியா எங்கேயோ! பாகிஸ்தான் திண்டாட்டம்!
சரி, அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் என்ன ஆகும்? இங்கேதான் இந்தியாவின் உண்மையான பவர் வெளிப்படுகிறது! ராணுவ வலிமையில் பாகிஸ்தானை ஒப்பிடுகையில், இந்தியா எங்கேயோ இருக்கிறது! உலக ஃபயர்பவர் குறியீடு (Global Firepower Index) என்ன சொல்கிறது தெரியுமா? இந்தியா ராணுவ வலிமையில் உலகிலேயே 4-வது இடம்! பாகிஸ்தான் 12-வது இடம்! இந்தியாவின் பலம் பாகிஸ்தானை விட 3 மடங்கு அதிகம்!
ரஃபேல், சுகோய் போன்ற உலகத்தரம் வாய்ந்த போர் விமானங்கள், மேம்பட்ட இரவு நேரப் போருக்கு கச்சிதமான உபகரணங்கள், INS விக்ராமாதித்யா, INS விக்ராந்த் போன்ற ராட்சச விமானந்தாங்கிக் கப்பல்கள் கொண்ட வலிமையான கடற்படை என இந்தியாவின் விரிவான ஆயுதக் களஞ்சியம்… எதிரிகளை மிரள வைக்கும்! டிஜிட்டல் போர்லயும் சரி, துல்லியமான நீண்ட தூர அணு ஆயுத தாக்குதல் திறனிலும் சரி… பாகிஸ்தானுடன் ஒப்பிட்டால் இந்தியாவுக்கு நிகர் இந்தியா மட்டுமே!
பொருளாதார பலம்… பாகிஸ்தான் பரிதாப நிலை!
ராணுவ பலம் ஒருபக்கம் என்றால், பொருளாதார பலம் இன்னொரு பக்கம்! இந்த விஷயத்திலும் பாகிஸ்தான் பரிதாப நிலைதான்! தனிநபர் வருமானத்தில் இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னே! இந்தியாவின் நிதி நிலைமை அசைக்க முடியாத பாறை போல உறுதியானது! கணிசமான பாதுகாப்பு பட்ஜெட்டுடன், வெளிநாட்டு இருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க இந்தியாவுக்கு கைகொடுக்கும்! பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை போருக்காக ஒதுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு!
ஆனால், பாகிஸ்தான்? அங்கே பெட்ரோல், டீசல் இல்லாம ராணுவமே பயிற்சி செய்ய முடியாமல் திண்டாடும் நிலை! இதைவிட பெரிய வேடிக்கை வேறென்ன இருக்க முடியும்? மோசமான பொருளாதாரம், லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாடும் பாகிஸ்தானால் ஒரு நீண்டகால போர்னா எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும்னு யோசிச்சுப் பாருங்க!
அடிப்பது எப்போது? எப்படி? இந்தியா தீர்மானிக்கும்!
பஹல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு போர் வருமா என்ற பேச்சு எழுந்தாலும், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராம்ஷ்வர் ராய் போன்ற நிபுணர்கள், ‘இப்போதைய சூழல் உடனடி போர் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை’ என்று கூறினாலும், ‘தண்டனை நடவடிக்கைக்கான வாய்ப்பை ஒதுக்க முடியாது’ என்கிறார்! அதாவது, அடிப்பது எப்போது, எப்படி என்பதை இந்தியா தீர்மானிக்கும்! அணுசக்தி முதல் டெக்னாலஜி வரை எல்லா களத்திலும் இந்தியாவுக்குத்தான் மேன்மை! பெரிய ஆயுத பலம், நவீன தொழில்நுட்பம், உறுதியான பொருளாதாரம்… இதுதான் இந்தியாவின் பலம்!
போர் செலவு, ஆயுதக் கையிருப்பு… இந்தியா தயார்!
போர்னா சும்மாவா? செலவு ஒருபக்கம்… வெடிமருந்து கையிருப்பு இன்னொரு பக்கம்! கார்கில் போர்லயே பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு அதிகம் செலவு செய்தது வரலாறு! இந்தியாவின் பொருளாதார வலிமை, அந்நியச் செலாவணி கையிருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க கைகொடுக்கும்! வெடிமருந்து கையிருப்பிலும் இந்தியா படு கெட்டியாக இருக்கிறது! நீண்டகால போர் நடந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு இருக்குதாம்! அதிரடி ஆயுத உற்பத்தியிலும் இந்தியா சுயசார்பை நோக்கி வேகமாக நகர்வது இன்னும் பலம்! ஆயுதங்களை ஏற்றுமதியும் செய்கிறோம்!
ஆனால் பாகிஸ்தான்? பொருளாதாரக் கட்டுப்பாடு, லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாட்டம்! ஒரு நீண்டகால போர்னா இவங்களால நிக்கவே முடியாது!
இந்தியாவிடம் வம்பு செய்தால்… பதிலடி பயங்கரமாக இருக்கும்!
மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்றால்… இந்தியா இப்போது பழைய இந்தியா இல்லை! பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! யார் வம்பு செய்தாலும், எங்கு பிரச்சனை செய்தாலும், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்! ராணுவ பலம், பொருளாதார வலிமை, தொழில்நுட்ப மேன்மை என எல்லா வகையிலும் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிற்கிறது! பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பரிதாப நிலையை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது!