No menu items!

வைபவ் சூர்யவன்ஷி அ​திரடி சாதனை

வைபவ் சூர்யவன்ஷி அ​திரடி சாதனை

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. 210 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 25 பந்​துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்​களி​லேயே 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில், 11 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 40 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இந்த போட்​டி​யில் சதம் விளாசி​யதன் மூலம் சூர்​ய​வன்ஷி பல்​வேறு சாதனை​களை படைத்​தார். போட்டி முடிவடைந்​ததும் அவர் கூறிய​தாவது: முதல் பந்​தில் சிக்​ஸர் விளாசுவது என்​பது எனக்கு சாதாரண விஷ​யம். நான் இந்​தி​யா​வுக்​காக 19 வயதுக்​குட்​பட்ட அணிக்​காக விளை​யாடி​யுள்​ளேன், மேலும் உள்​ளூர் அளவிலும் விளை​யாடி​யுள்​ளேன், அங்கு நான் முதல் பந்​தில் சிக்​ஸர்​களை அடித்​துள்​ளேன். முதல் 10 பந்​துகளை விளை​யாடும் போது நான் அழுத்​தத்​துக்கு உள்​ளானது இல்​லை. என்னை நோக்கி வரும் பந்​துகளை அடிக்க வேண்​டும் என்ற மனநிலை​யில் தெளி​வாக இருப்​பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல்லில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. கடின​மாக உழைப்​பவர்​கள் ஒரு​போதும் தோல்​வியடை​யாமல் இருப்​பதை கடவுள் உறுதி செய்​கிறார். தற்​போது களத்​தில் பார்க்​கும் செயல் திறன்​களுக்​கும், நான் அடை​யும் வெற்​றிக்​கும் எனது பெற்​றோர் தான் காரணம். இந்த தருணத்​திற்​காக நீண்ட கால​மாக தயா​ராகி வந்​தேன், நான் விரும்​பிய வழி​யில் அது நிகழ்ந்​த​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். ராஜஸ்​தான் அணிக்​கான வீரர்​கள் தேர்வு சோதனை​யில், நான் நன்​றாக பேட்​டிங் செய்​தேன். அப்​போது பேட்​டிங் பயிற்​சி​யாளர் விக்​ரம் ரத்​தோர், அணி மேலா​ளர் ரோமி பிந்​தர் ஆகியோர் ஏலத்​தின் போது அணி​யில் எடுக்க முயற்​சிப்​போம் என்று கூறினர்.

அவர்​கள் என்னை தலைமை பயிற்​சி​யாளர் ராகுல் திரா​விட்​டிடம் அறி​முகப்​படுத்​தினர். அவரிடம் பயிற்சி பெற வேண்​டும் என்ற என்​னுடைய கனவு நிறைவேறியது. உதவி பயிற்​சி​யாளர்​களும் மூத்த வீரர்​களும் எனக்குஆதரவு கொடுத்​தனர். என்​னால் சிறப்​பாக செயல்பட முடி​யும் என்ற நம்​பிக்​கையை அவர்​கள் தரு​கிறார்​கள்.

அணிக்​காக என்​னால் ஆட்​டத்தை வென்று கொடுக்க முடி​யும் என்று அவர்​கள் என்​னிடம் கூறுகிறார்​கள். அடுத்து என்ன நடக்​கும் என்ற அழுத்​தம் இல்​லை. நான் இந்​திய அணிக்​காக பங்​களிக்க விரும்​பு​கிறேன், அதற்​காக கடின​மாக உழைக்க வேண்​டும். அந்த நிலையை அடை​யும் வரை என்​னால் கடின​மாக உழைப்​பதை நிறுத்த முடி​யாது. நாட்​டுக்​காக சிறப்​பாக விளை​யாட முயற்​சிப்​பேன்​. இவ்​வாறு வைபவ்​ சூர்​யவன்​ஷி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...