ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட்பேட்அக்லி’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க அந்த படம் 250 கோடி வசூலை தாண்டிவிட்டது என்கிறார்கள். தமிழகத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும், அஜித்தின் வெற்றி படத்தில் குட்பேட்அக்லி சேர்ந்துவிட்டது. தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் குட்பேட்அக்லி 6வது இடத்தில் இருப்பதாக தகவல்.
இந்நிலையில், அஜித்தில் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது யார்? அந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. குட்பேட்அக்லி படத்தை தயாரித்த மைத்ரி நிறுவனமே அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக தகவல். அஜித் 200 கோடிவரை சம்பளம் கேட்பதால், அவர்களை தவிர மற்றவர்கள் ஆர்வமாக இல்லை. தனது பட இயக்குனரை அஜித்தான் முடிவு செய்து, தயாரிப்பாளருக்கு அனுப்புவார். ஆனால், இன்னமும் இந்த விஷயத்தில் அஜித் முடிவெடுக்கவில்லை. இந்த ஆண்டு அக்டோபர் மாதம்வரை அவர் கார் ரேசில் பிஸியாக இருப்பதால், இன்னும் கொஞ்ச காலம் கழித்து படம் குறித்து முடிவெடுக்கலாம். அதுவரை கார் ரேசில் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறாராம்.
இப்போதைய நிலவரப்படி, குட்பேட் அக்லியை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன், அஜித்தை வைத்து வீரம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா ஆகியோர் அஜித் மனதில் இருப்பதாக தகவல். இவர்களை தவிர, அஜித்தை வைத்து வெற்றி படம் கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு ஆகியோரும் அந்த பட்டியலில் இருக்கிறார்களாம். இவர்களை யாரை அஜித் தேர்ந்தெடுக்கப்போகிறார்? இவர்களா? அல்லது வேறு யாரையாவது அறிவிப்பாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.