No menu items!

கல்லீரல் கொழுப்பு DANGER?

கல்லீரல் கொழுப்பு DANGER?

கல்லீரல் கொழுப்பு என்பது ஆபத்தானதா? குணப்படுத்த முடியாதா? கல்லீரல் கொழுப்பு, பெண்களுக்குதான் அதிகம் ஏற்படுமா?

இவ்வாறு கல்லீரல் கொழுப்பு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ஜெஸ்வந்த்.

தவறான நம்பிக்கைளும் உண்மைகளும்

கல்லீரல் கொழுப்பு ஆபத்தானது அல்லகல்லீரல் கொழுப்பு நோய்க்கு சிகிச்சை எடுக்காவிட்டால்

மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கல்லீரல் வீக்கம் ஏற்படலாம், மேலும் ஃபைப்ரோஸிஸ் (சிரோசிஸ்), கல்லீரல் செயலிழப்பு ஏன் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

மது அருந்துவதால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுகிறதா?

கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றுதான் மது அருந்துதல். அதாவது இந்த பாதிப்புக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. இப்போதெல்லாம் மது அருந்தாதவர்களுக்கும் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD) ஏற்படுகிறது. உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களாலும் உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்னைகளாலும் ஏற்படுகிறது. உடல் மெலிந்தவர்கள்கூட கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்படலாம்.

பெண்களுக்கு கல்லீரல் கொழுப்பு நோய் அதிகம் ஏற்படலாம்.

ஆண்களைவிட பெண்களிடையே ஆல்கஹால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல மாதவிடாய் முடிவடையும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், கல்லீரல் கொழுப்பு நோயை மோசமாக்கலாம். மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலும் பெண்களுக்கு கல்லீரலில் கொழுப்பு உருவாகலாம்.

கல்லீரலில் கொழுப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும் சாப்பிடக் கூடாது

இதில் எந்த உண்மையும் இல்லை. கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருந்தால் அதிக காய்கறிகள், பழங்கள், புரதம் என சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்பட அதிக கலோரி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்த முடியாது

கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்தலாம். மல்யுத்த வீரர்கள் ஒரு நாளைக்கு 10,000 கலோரிகளுக்கு மேல் உணவு உட்கொண்டாலும் தீவிர உடற்பயிற்சி காரணமாக அவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு உருவாகாது.

எனவே கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால் உடல் எடையைக் குறைப்பது, நீரிழிவு நோய்க்கு சிகிச்சை, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது என ஆளுகை முறையை மாற்றுவதன் மூலமாக இதனைச் சரிசெய்யலாம். குடலை ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதன் மூலமாக நச்சுகள், கல்லீரலை அடைவதைத் தடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...