No menu items!

செல்லப் பிராணிகளை தெரிந்துகொள்வோம்

செல்லப் பிராணிகளை தெரிந்துகொள்வோம்

இன்று சர்வதேச செல்லப் பிராணிகள் தினம். இந்த நாளில் நாம் செல்லமாய் வளர்க்கும் பூனைகள் மற்றும் நாய்களைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

பூனைகள்

பூனைகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை தூங்குகின்றன. அவை தங்களின் வாழ்க்கையில் சுமார் 70 மதவாதத்தை தூங்கிக் கழிக்கின்றன.

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள டல்கீட்னா என்ற நகருக்கு, ஸ்டம்ப்ஸ் என்ற பூனை 20 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளது.

1963-ம் ஆண்டில், ஃபெலிகே என்ற பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
புலிகளின் குணாதிசயத்தில் 95 சதவீதத்தை பூனைகள் கொண்டுள்ளன.

வீட்டில் வளர்க்கும் பூனைகளால், மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓட முடியும்.

பூனைகளால் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை சுழற்ற முடியும்.

பூனைகளுக்கு 230 எலும்புகள் உள்ளன.

பூனைகளால் தங்கள் உயரத்தைவிட 5 மடங்குஅதிக உயரம் வரை குதிக்க முடியும்.

குட்டிப் பூனைகளுக்கு 26 பற்களும், பெரிய பூனைகளுக்கு 30 பற்களும் இருக்கும்.

‘கிரீம் பஃப்’ என்ற பூனை மிக அதிகமான ஆண்டுகள் உயிர்வாழ்ந்த பூனையாக கருதப்படுகிறது. டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த இப்பூனை 38 ஆண்டுகள் உயிர்வாழ்ந்துள்ளது.

நாய்கள்

மனிதர்கள் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய்களை வீட்டில் வளர்த்து வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதிலிருந்த 12 நாய்களில்3 நாய்கள் உயிர்தப்பின.

மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்கள் குட்டிகளாக இருக்கும்போது 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கும்.
சிறிய வகை நாய்கள் அதிக நாட்கள் உயிர்வாழும்.

நாய்கள் சராசரியாக 10 முதல் 14 வருடங்கள் வரை உயிர்வாழும்.

ரஷ்யாவைச் சேர்ந்த லைகா எனும் நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயாகும். 1957-ம் ஆண்டில் இது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

நாய்க் குட்டிகளுக்கு 28 பற்களும், பெரிய நாய்களுக்கு 42 பற்களும் இருக்கும்.

நாய்களை வளர்ப்பதால், ரத்த அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது.

நாய்களின் சராசரி உடல் வெப்ப நிலை 101 டிகிரி முதல் 102.5 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...