நீங்கள் வீட்டில் நாய் வளர்ப்பவரா? அந்த நாயுடன் தினமும் வாக்கிங் செல்பவரா?
ஆம் என்றால் இந்த செய்தி உங்களுக்கானது.
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் சமீப காலங்களாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலமாக பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இது போன்ற சம்பவங்கள் ஆக்ரோஷமான நாய்களால் நடைபெறுவதால் இந்திய அளவில் 23 வகை நாய்களுக்கு இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யவும் அரசு தடை விதித்திருந்தது.
அதில். டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் ஆகிய நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என்பதால் 23 வகை நாய் இனங்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை வெளியிடங்களுக்கு அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவது வாடிக்கை. இது போன்ற நேரங்களில் உரிமையாளரை மீறியும் சில இடங்களில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.