ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஹோலிப் பண்டிகை நமது வாழ்வில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வளர்க்கிறது. ஹோலியின் பல்வேறு வண்ணங்கள், வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் இப்பண்டிகை குறிக்கிறது. அன்பு, நேர்மறையான விஷயங்களை நாம் பரப்ப வேண்டும் என்பதையும் இப்பண்டிகை நமக்கு கற்பிக்கிறது. வண்ணமயமான இப்பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரட்டும். இவ்வாறு திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.