கடந்த திமுக ஆட்சி காலங்களில், அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். பல சினிமா மேடைகளில் சிறப்புரை ஆற்றுவார். அவரும் ஒரு சினிமாக்காரர் என்பதால், முதல்வராக இருந்தபோது பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்தார். தனது பிஸியான நேரத்திலும் சினிமா பணிகளையும் ஆர்வமாக செய்து வந்தார். சினிமா தொடர்பானவர்களை அடிக்கடி சந்தித்து பேசியும் வந்தார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு மீண்டும் பதவியேற்றபோது அது மாறிப்போனது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், சினிமா விழாக்களில் கலந்துகொண்டது இல்லை.அவருக்கு பாராட்டுவிழா அல்லது நன்றி அறிவிப்பு விழா நடத்தலாம் என்று திரையுலகினர் கேட்டபோதும் அதை மறுத்துவிட்டார். தந்தை போல சினிமா பாடல் வெளியீட்டுவிழா, தொடக்கவிழா, வெற்றி விழாக்களில் கலந்து கொள்வ தில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்கள் அழைத்தும் எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு சென்றது இல்லை. ஏன், மகன் உதயநிதி நடித்த படங்கள், ரெட் ஜெயன்ட் விழாக்களுக்கும் சென்றது இல்லை. ஆனால், முக்கியமான படங்கள், நல்ல படங்களை பார்த்து ரசிக்கிறார்.
தேவைபட்டால் படக்குழுவை பாராட்டுகிறார்
இந்நிலையில், லண்டனில் சிம்பொனி இசையை நடத்திய இசைஞானிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அது அரசு விழாவாக இருப்பதால், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தனது இல்லம் வந்த இளையராஜாவை வாசல் வரை வந்து வரவேற்றார் முதல்வர். அந்த அளவுக்கு அவர் மீது பாசம், மரியாதை வை த்துள்ளார். அதனால், இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்ப்படுகிறது.