ஒவ்வொரு ஆண்டு தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு, சரஸ்வதி பூஜை போன்ற நாட்களில் அதிக படங்கள் வெளியாகும். முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வரும். அதேபோல், கோடை விடுமுறைக்கும் கணிசமான படங்கள் வரும். மாணவர்கள், குடும்பத்தினர் கோடை விடுமுறையில் அதிக படங்களை பார்க்கும் சீசன் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 10க்கும் அதிகமான பெரிய படங்கள், ஏகப்பட்ட சின்ன படங்கள் வெளியாவது வாடிக்கை.
ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறை டல் அடிக்கிறது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அதிக அளவில் வெளியாகவில்லை.இந்தஆண்டு கோடை முறை வறண்டு போய் இருக்கிறது என்கிறார்கள் தமிழ்சினிமா வட்டாரத்தில்
இது குறித்து அவர்கள் கூறுவது ‘‘இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரஜினி, கமல் படங்கள் வரவில்லை. ரஜினி நடிக்கும் கூலி படம் முடியவில்லை. கமலின் தக் லைக் படப்பிடிப்பு முடிந்தாலும் எப்போது ரிலீஸ் என தெ ரியவில்லை. விஜயின் ஜனநாயகன் அடுத்த ஆண்டுதான் ரிலீஸ். சிவகார்த்திகேயன் நடித்த சிக்கந்தர் படமும், தனுசின் இட்லி கடை படமும் கோடைக்கு வரவில்லை ஆக, தமிழ்சினிமாவில் நிறைய ஏமாற்றங்கள்.
ஏப்ரல் 10ம் தேதி, அஜித் நடித்த குட்பேட்அக்லி வருகிறது. அதுதான் கோடையில் வெளியாகும் பெரிய படம். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் மே 1ம் தேதி வெளியாகிறது. சுந்தர். சி, வடிவேலு நடித்த கேங்கர்ஸ் ஏப்ரல் இறுதியில் வெளியாகிறது.ஆக, இந்த படங்கள் தவிர, பெரிய ஹீரோக்கள் படங்கள் கோடையில் வெளியாவது மாதிரி தெரியவில்லை. 2 மாத கோடை விடுமுறையில் வெறும் 3 பெரிய படங்கள் மட்டுமே வருகிறது.இது தவிர, மற்ற மொழி படங்கள், ஆங்கில படங்கள் வரலாம். விஜய்சேதுபதி நடித்த ட்ரைன், கார்த்தியின் வா வாத்தியாரே படங்கள் நிலை தெரியவில்லை.