No menu items!

One Lineனில் 7 கோள்களை பார்க்கலாம்!

One Lineனில் 7 கோள்களை பார்க்கலாம்!

கடந்த மாதம் புதன், வெள்ளி உள்ளிட்ட 7 கோள்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றது போல, இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காண முடியும்.

பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

செல்போன் செயலிகள் மூலம் கோள்களின் நிலைகளை தெரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய ஏழு கோள்களும் இன்று முதல் நான்கு நாள்களுக்கு அணிவகுத்து நிற்கும் என்றும் இதன்பிறகு இதுபோன்ற ஒரு அரிய நிகழ்வு வரும் 2040ஆம் ஆண்டில்தான் தெரியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலையில், இன்று முதல் வானில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது கடந்த ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நீடித்த நிலையில், மீண்டும் அதுபோன்ற நிகழ்வு இன்று ஏற்படுகிறது.

இது மிக அரிய நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும்தான்.

இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கிறது..பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அபூர்வம்தான்.

எனவே, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமே அசந்துபோகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...