ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் படம் ‘ஸ்வீட்ஹார்ட்’. இதில் ரியோராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். சென்னையில் நடநத இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய யுவன்ஷங்கர்ராஜா ‘‘தயாரிப்பாளராக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்துவிட்டார்கள். படத்தை பார்த்தேன், நன்றாக இருந்தது. எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு பாடல்களை இணைத்தோம். ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. மார்ச் 14ஆம் தேதி படம் ரிலீஸ்’’ என்றார்
ஹீரோ ரியோ ராஜ் பேசுகையில், ” யுவனின் ரசிகர்கள் பலர். அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பிடிக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியானதுபோது எட்டாவது படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது முதல் அவர் இசைக்கு நான் பெரிய ரசிகன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்தது. எப்போது எனக்கு அவர் பாடல்தான் முக்கியமாக இருக்கும். இந்தப் படத்தில் எனக்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அற்காக மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் முழுக்க, முழுக்க ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.’’ என்றார்
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், ‘‘என் தலைவன் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கும் , இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ, இல்லையோ. ‘ஸ்வீட் ஹார்ட் ‘என்று சொல்லாமல் கடக்க முடியாது. அப்படியொரு அருமையான தலைப்பு இது. கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள். அதற்கு எப்போதும் உதாரணம் ரியோ ராஜ் தான். அவன் நடித்த இந்தப் படமும் ஹிட்டாகும். அடுத்த படமும் ஹிட்டாகும். பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள்.
ஆனால் நான் என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலை தான் காதலுக்காக சொன்னேன். இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ என்றார்.
*