நவீன்குமார் இயக்கத்தில் ராதாரவி, ஸ்ரீஜா, வனிதாவிஜயகுமார், ஸ்ரீ , வையாபுரி உட்பட பலர் நடித்த படம் ‘கடைசி தோட்டா’. கொடைக்கானலில் உள்ள தனியார் ரிச்சார்ட்டில், ஒரு இரவில் இளம் பெண் சுட்டுக்கொல்லப்படுகிறார். அந்த ரிசார்ட்டில் தங்கியிருப்பவர்களை விசாரிக்கிறா் போலீஸ் அதிகாரியான வனிதா. அந்த ரிசார்ட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல கோடி பணத்தை மீண்டும் தன் வசம் ஆக்க முயற்சிக்கிறார் ஒரு அரசியல்வாதி. அந்த ரிசார்ட்டில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ராதாரவிக்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?அவர் என்ன செய்கிறார் என்பது கதை
ஒரு கொலை, அதை துப்பறிதல் என்ற கோணத்தில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ரிசார்ட்டில் தங்கியிருப்பவர்களின் பின்னணி, அவர்கள் சந்தேகம், அடுத்தடுத்த திருப்பங்கள் என திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்து இருக்கிறார் இயக்குனர். ராதாரவி நடை, உடை, அவரின் ஸ்டைலிஷ் ஆன நடிப்பு படத்துக்கு பலம். அவருக்கும், ஸ்ரீஜாரவிக்குமான பாசப்பிணைப்ப காட்சிகள் டச்சிங். தனது 50 ஆண்டுகால அனுபவத்தை கொண்டு, பல காட்சிகளில் சிறப்பாக செய்து இ ருக்கிறார் ராதாரவி. கொலை குறித்து சில விஷயங்களை தெரிந்தும், அதை போலீசிடம் சொல்ல முடியாமல் தவிப்பவராக ஸ்ரீ சிறப்பாக நடித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை குறைத்து இருக்கலாம். ஆனாலும் கிளைமாக்சில் அவர் நடத்தும் நாடகமும் சூப்பர். கொலையை யார் செய்து இருப்பார்கள், என்ன காரணம் என்ற ஆர்வமும், கொலை விசாரணை காட்சிகளும் படத்துக்கு பலம்.
வயதான தம்பதியினரின் காதல், நம்பிக்கை துரோகம் , பணத்தாசை என பல விஷயங்களை கடைசி தோட்டா பேசுகிறது. ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், கடைசி தோட்டா யாரை நோக்கி பாய்கிறது என்ற கரு ஓகே. கொடைக்கானல் காட்சிகள் கண்களுக்கு இதம். ஆனாலும், கொலையாளி யார் என்பதை சில காட்சிகளில் ஓபன் செய்திருக்க வேண்டாம்.