கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிக்கும் கிங்ஸ்டன் படம், மார்ச் 8ல் வெளியாகிறது. சென்னையில் நட ந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், சுதா , அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
அதில் தாணு பேசியது
“இந்த படத்தில் இடம் பெற்ற ராசா ராசா பாடல் பெரிய வெற்றி பெற்றுள்ளது.என் தயாரிப்பில் உருவான அசுரன் பட பாடல், இசையும் வெற்றி பெற்றது. தெலுங்கில் ரீமேக் ஆனபோது அந்த இசையை கேட்டு வாங்கி பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள்” என்றார்.
இயக்குனர் சுதா பேசியது “எனக்கு ஜி.வி.பிரகாசை 20 ஆண்டுகளாக தெரியும். ஏதாவது புதுசா செய்யணும்னு சொல்லிட்டே இருப்பார். இப்போது அதை சாதித்துவிட்டார்” என்றார்.
பா.ரஞ்சித் பேசியது
” சமீபகாலமாக கிங்ஸ்டன் படம் பற்றி, எல்லாரிடமும் ஜி.வி.பிரகாஷ் பேசுகிறார். அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராடுகிறார். இந்த படத்தில் கிராபிக்ஸ் டீம் அருமையாக வேலை செய்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் எடுத்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணுக்குபின் எனக்கும் ஜி.வி.பிரகாசுக்கும் செட் ஆனது. ஷார்ட் பிலிம் பின்னணியில் இருந்து வ ந்த இயக்குனர் கமல் இ
ந்த படத்தை அழகாக கொடுத்து இருக்கிறார். இப்போது குடும்பஸ்தன், டிராகன் படங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. நல்ல கதைகள் ஜெயிக்கிறது
“என்றார்.
வெற்றிமாறன் பேசியது
ஜி.வி.பிரகாஷ் டயர்டு ஆகிவிட மாட்டார். எந்த நேரத்தில் அழைத்தாலும் பேசுவார். அனைத்து இயக்குனர்களுக்கும் நேரம் கொடுத்து பேசுவார்.அவர் ஏன் நடிக்க வருகிறார் என முன்பு யோசித்தேன்.ஆனால் நடிக்க வந்தபின் அவர் இசை மெருகேறி வருகிறது. தினமும் அவர் கற்க தயாராகி வருகிறார். கிங்ஸ்டன் படத்துக்கு கப்பல், அலைகள் போன்ற செட் அபாரமாக இருந்தது, அந்த செட் பட்ஜெட் கேட்டேன். நான் நினைத்ததில் 10% இருந்தது என்றார்.