No menu items!

பாண்டியாவின் வாட்ச் 7 கோடி ரூபாய்

பாண்டியாவின் வாட்ச் 7 கோடி ரூபாய்

கையில 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாட்ச் கட்டி இருந்தாலே அது எங்கயும் இடிபடக் கூடாதுன்னு நாம பார்த்து பார்த்து நடப்போம். வாட்ச் கட்டின கையை அசையாம வச்சு அதைப் பாதுகாப்போம். ஆனா 7 கோடி ரூபாய் வாட்ச்சை கையில கட்டிட்டு அசால்ட்டா ஒரு ஒண்டே மேட்ச் ஆடியிருக்கார் ஹர்திக் பாண்டியா. சாம்பியன்ஸ் ட்ராபி கிர்க்கெட் தொடர்ல இப்ப அதுதான் பரபரப்பா பேசப்பட்டு வருது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியிலதான் இந்த 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கட்டிட்டு ஆடியிருக்கார் ஹர்த்திக் பாண்டியா.

RICHARD MILLE நிறுவனத்தின் RM 27-02 வகை தயாரிப்புதான் இந்த வாட்ச். பிரபல டென்னிஸ் வீர்ர் ரஃபேல் நடாலுக்காக இந்த வகை வாட்ச்சை தயாரிச்ச RICHARD MILLE நிறுவனம், அதுக்குப் பிறகு இந்த வகையில் மொத்தமே 50 வாட்ச்களைத்தான் தயாரிச்சிருக்கு. அதுல ஒரு வாட்ச்சைக் கட்டிக்கிட்டுதான் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில ஹர்த்திக் பாண்டியா விளையாடி இருக்கார்.

வாட்ச் கட்டியிருக்கோமேன்னு ஹர்த்திக் மைதானத்துல கவனமா எல்லாம் நிக்கல. பல பந்துகளை டைவ் அடிச்சுப் பிடிச்சிருக்காரு. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீர்ர் பாபர் ஆசமோட விக்கெட்டையும் எடுத்திருக்காரு. இப்படி 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கையில கட்டி அசால்ட்டா கிரிக்கெட் ஆடின ஹர்த்திக் பாண்டியாவைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படறாங்க.

இந்த வாட்ச் மட்டுமில்லை… 8 அறைகளைக் கொண்ட 30 கோடி ரூபாய் அபார்ட்மெண்ட், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 Patek Philippe Nautilus Platinum 5711 வாட்ச்கள், ஒன்றரை லட்ச ரூபாய் ஷூ, 1.6 லட்ச ரூபாய் பைஜாமா, 3.73 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கார்னு ஏகப்பட்ட காஸ்ட்லி ஐட்டங்களை வச்சிருக்கார் ஹர்த்திக் பாண்டியா.

ஆரம்ப காலகட்டத்துல வறுமையால பாதிக்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா, 5 ரூபாய் மாகி நூடுல்ஸ் சாப்பிட்டுதான் பயிற்சி எடுத்திருக்கார். அந்த வறுமைக் காலம் போய் இன்னைக்கு அவரை கோடீஸ்வர வாழ்க்கை வாழ வச்ச பெருமை கிரிக்கெட்டைத்தான் சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...