இப்போதெல்லாம் மிஷ்கின் மைக் பிடித்தாலே ஏகப்பட்ட சர்ச்சைகள். ‘கொட்டுக்காளி’ பட விழாவிலும், ‘பாட்டல் ராதா’ சினிமா நிகழ்ச்சியிலும் அவர் பேசியது வைரலானது.
மிஷ்கினின் ஆபாச பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்க, தனது தவற்றை உணர்ந்து ‘பேட் கேர்ள்’ படவிழாவில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்க, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த அந்த பட விழாவில் வழக்கமான, தனது ஸ்டைலில் பேச, அதுவும் சர்ச்சை ஆகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதாவது…
இன்னிக்கு நான் எதுவும் கெட்ட வார்த்தை பேசலை. ஒரு கொம்பை என்னிடம் இருந்து அறுத்து எடுத்துவிட்டார்கள். இப்ப, ஒரு கொம்புதான் இருக்குது. இன்னும் ஒரு ஆண்டுக்கு எந்த மேடையிலும் பேசக்கூடாதுனு நினைச்சேன். தயாரிப்பாளர் அகோரம், இயக்குனர், ஹீரோ என 3 பேருக்காக இந்த விழாவுக்கு வந்தேன்.
ஹீரோ பிரதீப் புருஸ்லீ மாதிரி. இன்னமும் அவர் பைட் படம் பண்ணலை. ஒருவேளை என்னிடம் பண்ணலாம். ரொம்ப காலத்துக்குபின் சினிமாவில் ஒரு பிரைட்டான ஒருவராக அவரை பார்க்கிறேன். சினிமா பின்புலம் இல்லாமல் அவர் வளர்ந்து இருக்கிறார். டிராகன் படத்தில் நான் வில்லனாக நடித்து இருக்கிறேன். எங்களுக்கான காட்சியில், அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவன் டைரக்ட் ப்ரண்ட்லி ஆர்ட்டிஸ்ட் என்பதை உணர்ந்தேன்.
சிலருக்கு 4 படம் வந்தவுடன் ஈகோ வரும். ரசிகர் மன்றம் சார்பில் பால் ஊற்றுவார்கள். வளராமலே 2 அடி வளர்வார்கள். அவர் பின்னால் 20 பேர் எதுக்கு வர்றாங்கனு தெரியாமல் சுற்றுவாங்க. அப்படி ஹீரோ மாறுவார்கள். ஆனால், பிரதீப் எளிமையானவர். என் தம்பி விஜய்சேதுபதி மாதிரி அவர் இருக்கிறார்.
சின்ன வயதில் ஏகப்பட்ட ரசிகர்களை அவர் வைத்திருக்கிறார். என் உதவியாளர்களிடம் அவரை பற்றி பேசினால், நம்பமாட்டார்கள். அவன் வெங்காயமானு கேட்பார்கள். ஆமா, பெரிய வெங்காயம்தான் என்பேன். இந்த பட இயக்குனர் அஷ்வத் டெரிபிளான இயக்குனர். ஸ்பாட்டுல ஒரு மாதிரி, வெளியில் ஒரு மாதிரி இருப்பார். அவ்வளவு ஹார்டு வொர்க் பண்ணுறாரு.
இந்த படம் ஹிட்டாகும். காரணம்… இந்த கதையில் ஒரு நீதி இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்களுக்கான நீதி அது. ஒரு கல்லுாரி பையன் எப்படி இருக்கணும்னு என்பதை, த னது அனுபவத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஷ்வத். இன்ஜினியரிங் படித்துவிட்டு, ஷார்ட் பிலிம் மேக்கர் ஆகி, இப்ப சினிமா எடுக்கிறார். பலம். அடுத்து சிம்புக்கு படம் பண்ணுகிறார். அந்த படமும் வெற்றி அடையும்.
பேட் கேர்ள்னு ஒரு படம் இன்னமும் வரலை. அது அமுக்கிவிட்டோம். அந்த படம் வரவே இல்லை. ஒரு பெண் எடுத்த அந்த படத்தை, டிரைலர் பார்த்துவிட்டு தடுப்பது தவறு. அந்த பெண் கலங்கிப் போய் இருக்கிறார். சினிமாவில் இருப்பவர்கள் அந்த படத்துக்காக பேசணும். அந்த படத்தில் கட் பண்ண வேண்டியதை கட் பண்ணி, சென்சாரில் பேசி, அரசியல்வாதிகளிடம் பேசி, அந்த படத்தை வெளியே கொண்டு வரணும்.
40 ஆண்டுகளுக்கு ஒரு பெண்தான் இயக்குனர் வருகிறார். கருணையுடன் அந்த படத்தை பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் பிரதீப் ரங்கநாதன் இனிய பொறுக்கி, இயக்குனர் பெரும் பொறுக்கி. நான் ஒரு கண் தெரியாத மான்ஸ்டர். ரொம்ப கம்மியான, ரொம்ப கெட்டவங்க இருக்கிற சினிமாவில் கஷ்டப்படுறேன். நான் சீக்கிரமா, சினிமாவை விட்டு வெளியே போகப்போற டைரக்டர்.