No menu items!

OTT-ல் ரிலீஸாகும் சுழல் 2

OTT-ல் ரிலீஸாகும் சுழல் 2

தமிழில் ஓடிடியில் வெளியான வெப்சீரியசில், அதிக வரவேற்பை பெற்ற பெற்றது ‘சுழல்’. இயக்குனர் புஷ்கர்,காயத்ரி கதை எழுதி, தயாரிக்க, பிரம்மா, அனுசரண் இயக்கிய இந்த வெப்சீரியல் 2022ம் ஆண்டு வெளியானது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், குமாரவேல் நடித்தனர்.

வடமாவட்டபின்னணி, கொலை, திருப்பங்கள் என நகர்ந்த அந்த சீரியஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இதன் அடுத்த பாகமான ‘சுழல் 2’ பிப்ரவரி 28ம் தேதி வெளியாகி என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ என்ற பெயரில் வெளியாகும் 2வது சீசன், ஒரே நேரத்தில் 240 நாடுகளில், பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வருகிறது.

இந்த தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்குகிறது குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகள் பின்னணியில் க்ரைம் திரில்லர் பாணியில் நகர்கிறது. அதாவது, ஹீரோ மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கிராமத்தை சென்றடைகிறார். அங்கு நிகழும் ஒரு கொலையால் அந்த கிராமமும், கிராம மக்களும் பயப்படுகிறார்கள். அடுத்த என்ன நடக்கிறது என்று கதை செல்கிறது.

முதற்பாகத்தில் வடமாவட்டங்களில் நடக்கும் மயானக்கொள்ளை திருவிழா முக்கிய களமாக இருந்தது. 2வது பாகத்தின் படப்பிடிப்பு துாத்துக்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டினம் தசாராவில் அதிக நாட்கள் நடந்துள்ளது. அந்த திருவிழாவும் கதையில் அஷ்டகாளி திருவிழா என்ற பெயரில் முக்கிய விஷயமாக வருகிறது. தமிழில் வெளியான வெப்சீரியசில் சுழல், விலங்கு ஆகியவை, உலக அளவில் வரவேற்பை பெற்றன. கோடிக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தன. இப்போது சுழல்2 வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘குற்றம்கடிதல்’ ஆகிய படங்களை இயக்கியவர் பிரம்மா, நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தை இயக்கியவர் சர்ஜூன். இவர்கள் இருவரும் இந்த வெப்சீரியசை இயக்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...