தனுஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் பவிஷ், அனிகா, ரபியா, பிரியாவாரியர், மாத்யூதாமஸ், ரம்யா மற்றும் சரண்யாபொன்வண்ணன் நடித்த படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் சென்னையில் இன்று நடந்த விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியது
‘‘இன்று இட்லி கடை படப்பிடிப்பில் இருப்பதால் தனுசால் இந்த விழாவுக்கு வரவில்லை. இது ஒரு யங் ஆன பிலிம். இதற்கு முன்பு வார், பிரியீட் படங்களுக்கு இசை அமைத்துவிட்டு, இந்த மாதிரி ஒரு படத்துக்கு இசையமைத்தது எனக்கும் மகிழ்ச்சி. எனக்கு ஸ்பெஷலான ஆல்பம் இது. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். நானும் தனுசும் பொல்லாதவன் படத்தில் இணைந்தோம். பெரிய ஹிட். 10 ஆண்டு இடை வெளிக்குபின் அசுரனில் இணைந்தோம். அந்த படமும் ஹிட். தனுஷ் இயக்கிய படத்தில், நான் முதலில் இணைந்து இருக்கிறேன். நான் படத்தை பார்த்துவிட்டேன். நன்றாக வந்து இருக்கிறது. புதுமுகங்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள். செல்வராகவன், தனுஷ் போன்றவர்கள் நன்றாக நடித்து காண்பிப்பார்கள். அதில் 60சதவீதத்தை நான் கொண்டு வந்தாலே பெரிய விஷயம். இந்த படம் மாஜிக் பண்ணும். இந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை.ஜெயிலர் படம் வெற்றி அடைந்தவுடன் அந்த குழுவுக்கு பெரிய பரிசு கொடுத்தார்கள். அந்த மாதிரி எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
சரண்யா பொன்வண்ணன் பேசுகையி்ல், ‘‘எனக்கு நாயகன் படம் எப்படியோ, அந்த மாதிரி விஐபி படமும் முக்கியம். என்னை பலரும் அந்த படம் பார்த்துவிட்டு, தனுஷ் அம்மா என்று சொல்கிறார்கள். நடிப்பு, இயக்கம், புர டக்ஷன், பாடல் என பல வேலைகளை பார்க்கிறார் தனுஷ். அவர் வேலையில் நேர்மை, ஒழுக்கம் இருக்கிறது. டப்பிங் வேலைகளுக்கு பல இயக்குனர்கள் வருவது இல்லை. ஆனால், அவர் வருவார். அவருக்கு ஆயுஷ், ஆரோக்கியம், மனநிம்மதியை ஆண்டவன் கொடுக்கணும். இந்த பட ஹீரோ பவிஷ் ரொம்ப கஷ்டப்பட்டார். மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். அவர்கள் பெரிய ஸ்டார் ஆக வரணும். ’’ என்றார்
‘‘எஸ்.ஜே.சூர்யா பேசுகையில் ‘‘இதில் விஸ்வாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சிறப்பாக நடித்துள்ளார். இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இங்கிலீஷ் பேசும் அம்மாவாக சரண்யாபொன்வண்ணன் அருமையாக நடித்துள்ளார். அவர் காட்சிகளை பார்த்து சிரித்தேன். ஜி.வி.பிரகாஷ் இசையில் கோல்டன் ஸ்பாரோ பாடல் ஹிட். முன்பே ஐதராபாத்தில் அந்த பாடலை எனக்கு போட்டு காண்பித்தார் தனுஷ். பிரியங்காமோகன் அதில் யங் மாமியாக அழகாக ஆடியுள்ளார். குஷி படத்தை பார்த்த மாதிரி, இந்த படத்தை சந்தோஷமாக பார்த்தேன்’’ என்றார்.