வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பு பற்றி மலையாள நடிகர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்திற்கும், அமிதாப் பச்சனுக்கும் நடிக்கவே தெரியவில்லை என மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ் பேசி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பு உள்ளது.
இந்தியாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் வேட்டையன் படத்தில் இணைந்து நடித்ததை சினிமா உலகமே கொண்டாடியது. கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்த நடித்தது வேட்டையன் படத்திற்கு மிகப் பெரிய பிளஸாக அமைந்தது. இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் ரஜினிகாந்த், துணிச்சலான போலீஸ் ஆபீசர் ரோலிலும், அமிதாப் பச்சன் வக்கீல் ரோலிலும் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவர் இணைந்து நடித்த கோர்ட் சீன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, பெரிய அளவில் பேசப்பட்டது.
பலரது பாராட்டையும் பெற்ற இந்த கோர்ட் சீன் பற்றி மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ் கூறி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேட்டையன் படத்தின் நீதிபதி ரோலில் இவர் தான் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வேட்டையன் படம் பற்றி கூறி கருத்துக்கள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக ஜாம்பவான்கள் என சொல்லப்படும் இரண்டு பெரிய நடிகர்கள் பற்றி இவர் பேசி உள்ளதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
அவர் தனது பேட்டியில் கூறுகையில், ரஜினிகாந்த்திற்கும், அமிதாப் பச்சனுக்கும் எப்படி நடிக்க வேண்டும் என்பதே தெரியவில்லை என்பதை நான் இந்த படத்தில் தான் புரிந்து கொண்டேன். படத்தில் நான் நடித்ததற்காக எனக்க சம்பளம் என்று எதுவும் கொடுக்கவில்லை. மும்பைக்கு வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் போட்டு கொடுத்தார்கள். அங்கு சொகுசாக தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். என்னுடைய ரோல் ரொம்ப சின்னது, எளிமையானது தான். நீதிபதியாக ஒரு ஷாட்டில் வந்து அமர வேண்டும் அவ்வளவு தான். ஒரு புறம் அமிதாப் பச்சன், மறுபுறும் ரஜினிகாந்த் இருந்தனர்.
நான் காலேஜில் படித்த காலத்தில் ரஜினி சார் பல்லால் ஹெலிகாப்டர் கட்டி இழுக்கம் சீன்களை பார்த்து மிரண்டு போய் உள்ளேன். அவர் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என விரும்பினேன். அது வேட்டையன் படத்தில் நடந்தது. ரஜினிகாந்த் வழக்கம் போல் தன்னுடைய ஸ்டையிலான நடை, நடிப்புடன் கோர்ட் அறைக்கு வந்தார். அமிதாப் பச்சனும் சிங்கம் போல் வந்தார். அவர்களின் ரியாக்ஷனை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். அப்போது தான் புரிந்து கொண்டேன் இவர்களை போல் நம்மால் பண்ண முடியாது என்று.
எனக்கு ஸ்டைலாக நடிக்கும் திறமையோ அல்லது கம்பீரமான குரலோ கிடையாது. திலீஷ் போத்தன், ஷரண் வேணுகோபால், ராஜீவ் ரவி போன்ற டைரக்டர்கள் இயக்கம் யதார்த்தமான படங்களில் யதார்த்தமாக நடிக்க தெரியும். ஆனால் அவர்களால் அது போல் நடிக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன். அவர்களின் நடிப்பை பார்ப்பதற்காக தான் நான் இந்த கேரக்டரில் நடித்தேனே தவிர, தமிழ் சினிமாவில் எனக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்காக அல்ல என்றார்.