கமல்ஹாசனின் கனவு படங்களில் ஒன்று மருதநாயகம். 17ம் நுாற்றாண்டில் தென்மாவட்ட போர் வீரனாக, தளபதியாக, பின்னர் மதுரை சுல்தானாக இருந்து, ஆங்கிலேயர்களால் துாக்கிலிடப்பட்ட யூசுப்கான் என்ற மருதநாயகம் வரலாறும், அவர் வளர்ந்த, வீழ்ந்த வரலாறும் வித்தியாசமானது. அது, சுவாரஸ்யங்கள், பரபரப்பு, திரும்புமுனை நிரம்பியது. அதனால், அவர் வரலாற்றை சினிமாவாக எடுக்க ஆசைப்பட்டார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனே அந்த படத்தை இயக்கவும் தயாரானார். 1997ம் ஆண்டு அந்த படத்தில் பூஜை சென்னையி்ல் நடந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆகியோர் அந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மருதநாயகம் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்வது என முடிவானது. நாசர், விஷ்ணுவர்தன் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. ஆனால், நிதி சிக்கல், வேறு சில பிரச்னைகளால் மருதநாயகம் படத்தை கமல்ஹாசன் கைவிட்டார். ஆனாலும், பல பேட்டிகளில் மருதநாயகம் குறித்து அவர் பேசினார். மீண்டும் அந்த படத்தை எடுக்க ஆசை என்றார். அந்த படத்துக்காக எடுத்த சில காட்சிகளை தனது நண்பர்களுக்கும் போட்டு காண்பித்தார் கமல்ஹாசன்.
ஆஸ்கர்விருது கனவு மாதிரி, மருதநாயகம் படமும் கமல்ஹாசனுக்கு கனவானது. பிற்காலத்தில் அவர் பல வெற்றியை கொடுத்தாலும், சாதனை படத்தாலும் மருதநாயகம் முடங்கிபோனது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு ஏ.ஐ படிக்க சென்ற கமல்ஹாசன், சமீபத்தில் சென்னை திரும்பினார். அவர் ஏ.ஐ படிக்க சென்றார் என்று கூறப்பட்டாலும், இப்போது அது தொடர்பாக பல தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து கமல் வட்டாரங்கள் கூறியது: