No menu items!

விடாமுயற்சிக்கு அதிகாலை, சிறப்பு காட்சி உண்டா?

விடாமுயற்சிக்கு அதிகாலை, சிறப்பு காட்சி உண்டா?

அஜித் நடித்த விடாமுயற்சி படம், நாளை மறுநாள்( பிப்ரவரி 6ம் தேதி) உலகமெங்கும் வெளியாகிறது. மகிழ்திருமேனி இயக்கிய இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜித்தின் மனைவியான திரிஷாவை வில்லன் டீம் கடத்த, என்ன நடக்கிறது என்பது கதை. அஜர்பைஜான் நாட்டில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த படம் உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பொதுவாக பெரிய நடிகர்கள் படத்துக்கு பிரமோஷன் நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும். டீசர் வெளியீட்டுவிழா, டிரைலர் வெளியீடு, பாடல் வெளியீட்டுவிழாக்கள் பிரமாண்டமாக நடக்கும். சென்னை தவிர, மற்ற ஊர்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கு, ஏன் மற்ற நாடுகளுக்கு சென்று கூட படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், விடாமுயற்சி விஷயத்தில் இது எதுவும் நடக்கவில்லை. அஜித் எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஆனாலும், ஏனோ மற்ற நடிகர்கள் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. இதுவரை விடாமுயற்சிக்காக எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. படம் குறித்து ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட சிலர் பேசினார்கள். படம் பேசட்டும் என இயக்குனர் பெரிதாக பேசவில்லை.
அஜித் படத்துக்கு அதிகம் விளம்பரம் தேவையில்லை என்பது அவர்களின் கணக்காக இருக்கிறது. தவிர, சில சிக்கல்களால் விடாமுயற்சி பிரமோஷன் ஈவன்ட் நடத்த முடியவில்லை என்றும் தகவல்.

இதற்கிடையில், விடாமுயற்சி படத்துக்கு அதிகாலை காட்சி உண்டா? குறிப்பாக, சிறப்பு காட்சிகள் உண்டா? இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லையே? என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இது குறித்து விசாரித்தால், ‘பெரிய படங்கள் வந்தால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தமிழக அரசின் வழக்கம். அதாவது வழக்கமான 4 காட்சிகளுக்கு பதில் 5 காட்சியை நடத்த சிறப்பு அனுமதி உண்டு. இதற்காக முறைப்படி படக்குழு தமிழக அரசை அணுக வேண்டும். விடாமுயற்சி படத்துக்கு சிறப்பு காட்சி நடத்த நாளை அனுமதி கிடைக்கும். பிப்ரவரி 6ம் தேதி பண்டிகை தினம் அல்ல. ஆனாலும், விஜயின் கோட் படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி கொடுக்கப்பட்டது. ஆகவே விடாமுயற்சிக்கும் அது கிடைக்கும். காலை 9 மணிக்கு முதல் ஷோ தொடங்க வாய்ப்பு. இன்னும் ஒரு வலுவான காரணம், இந்த படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

ஆனால், அதிகாலை காட்சி, அதாவது அதிகாலை 2 மணி, 4 மணிக்கு படம் தொடங்க வாய்ப்பில்லை. அஜித்தின் துணிவு படத்தின் அதிகாலை காட்சி சமயத்தில், சென்னை கோயம்பேடு தனியார் தியேட்டர் வாசலில் ஒரு ரசிகர்கள் மரணம் அடைந்தார். அதிகாலை காட்சி தேவையா என்று கடும் விமர்சனங்கள் ஏற்பட்டது. அதிலிருந்து அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி இருக்கிறது. தமிழகத்தில் இனி வாய்ப்பில்லை. விடாமுயற்சிக்கும் வாய்ப்பில்லை’’ என்கிறார்கள். பிரமோஷன், வியாபாரம், சிறப்பு காட்சி, ரிசல்ட் இது பற்றி அதிகம் கவலைப்படாமல் கார் ரேஸ் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

தனது படத்தை சமீபத்தில் அவர் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பதில்லை என்பதும் கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...