No menu items!

அங்கன்வாடியில் பிரியாணி

அங்கன்வாடியில் பிரியாணி

அங்கன்வாடிக்கு செல்லும் சிறு குழந்தையான சங்குதான் கேரளாவின் நேற்றைய ஹீரோ. கேரளாவில் உள்ள ஆங்கன்வாடி மையங்களைப் பற்றி வீடியோவில் சொன்ன கருத்துதான் அந்தச் சிறுவனை ஹீரோவாக்கி உள்ளது.

தேவிகுளம் பஞ்சாயத்தில் வசிக்கும் சிறுவனான சங்கு என்ற த்ரஜுல் எஸ்.சுந்தர், தனது அம்மா சாப்பாடு ஊட்டி விடும் வேளையில், அங்கன்வாடியில் அரசு சார்பில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவைப் பற்றி குறை கூறி இருக்கிறார். “ஆங்கன்வாடியில் தினமும் உப்புமா கொடுக்கிறார்கள். அது பிடிக்கவில்லை. அங்கு உப்புமாவுக்கு பதில் பிரியாணியையும், பொரித்த சிக்கனையும் கொடுக்க வேண்டும்” என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். சிரித்துக்கொண்டே அதைக் கேட்கும் சங்குவின் அம்மா, இதை உரிய இடத்தில் சொல்கிறேன் என்கிறார்.

அப்படி சொன்னதுடன் நிற்காமல், சங்கு பேசும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். எதேச்சையாக இந்த வீடியோவை கேரளாவின் சுகாதார மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான வீணா ஜார்ஜ் பார்த்திருக்கிறார். இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் அந்த வீடியோ பற்றிய தனது கருத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

“இந்த வீடியோவில் உள்ள குழந்தை சங்கு, எந்தவித களங்கமும் இல்லாமல் தனது விருப்பத்தைச் சொல்லி இருக்கிறது. அந்த வீடியோவை அவனது அம்மா பகிர்ந்த்தால் நான் பார்த்தேன் அந்த குழந்தையின் ஆசை கள்ளம் கபடமற்றது. ஆங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதில் பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும் என்று அந்த குழந்தை கேட்டிருக்கிறது. அந்த குழந்தைக்கும் அவனது அம்மாவுக்கும் எனது வாழ்த்துகள். அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு நாங்கள் ஆங்கன்வாடியில் முட்டையும் பாலும் கொடுத்து வருகிறோம். விரைவில் இந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்று அந்த வீடியோவில் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.

இந்த சிறு வயதிலேயே தன் சாப்பாட்டுக்காக குரல் கொடுத்த சங்குவை கேரள மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...