தனிநபர் வருமானவரி விலக்கு 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025-2026-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்…
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது. கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும்.
36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் ஒன்றுக்கு மட்டும் வசூலிக்கப்படும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74% ல் இருந்து 100% ஆக உயர்த்தப்படுகிறது
5 லட்சம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன பெண்களுக்கு ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும்.
2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.10.18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை அளிப்பதை காட்டுகிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட இது 8.4% குறைவு.
மாநிலங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: இதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும். இரண்டாவது சொத்து மதிப்பீட்டு திட்டம் (Second Asset Monetisation plan) 2025-2030 க்கு அறிவிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் ரூ.10 லட்சம் கோடி நிதி புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்யப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஈ-சரம் போர்ட்டலில் பதிவு செய்து ஐடி கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
விவசாயிகளுக்கான கடன் வசதியை அதிகரிக்க Kisan Credit Card வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும்.