No menu items!

டொனால்ட் ட்ரம்ப் போட்ட தடை மருத்துவமனையை முற்றுகையிடும் இந்தியர்கள்

டொனால்ட் ட்ரம்ப் போட்ட தடை மருத்துவமனையை முற்றுகையிடும் இந்தியர்கள்

அமெரிக்க அதிபரா கடந்த 20-ம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் போட்ட ஒரு உத்தரவு அங்க இருக்கிற இந்தியர்கள் வயித்துல புளியைக் கரைச்சிருக்கு. அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது தடை விதிக்கப்படும்கிறதுதான் அந்த உத்தரவு.

எச்1பி விசாவுல அமெரிக்காவுக்கு போகிற இந்தியர்கள் அந்த நாட்டுல தொடர்ந்து இருக்க, குழந்தைகளை முக்கிய காரணமா பயன்படுத்திட்டு இருந்தாங்க. அதன்படி அந்த நாட்டுக்கு எச்1பி விசாவுல போற இந்தியர்களுக்கு அங்கேயே குழந்தை பிறந்தா, அதுக்கு அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும். அதை வச்சு அந்த குழந்தைகளோட பெற்றோருக்கும் அமெரிக்காவோட ஒரு நெருங்கிஒய பந்தம் வந்துடும். அவங்களுக்கு க்ரீன்கார்ட் கிடைக்கவும் இது பல வழிகளிலே உதவியிருக்கு. இந்த சூழல்லதான் அமெரிக்காவின் புதிய அதிபரா பதவியேற்ற ட்ரம்ப் அதுக்கு செக் வச்சிருக்கார்.

இதன்படி வர்ற பிப்ரவரி 20-ம் தேதிக்கு பிறகு அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கறது கஷ்டம். இதுதான் இப்ப அங்க இருக்கிற இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கு. இந்தியர்கள் மட்டுமில்லாம அந்த நாட்டுல வேலைக்காக தங்கி இருக்கற மற்ற நாட்டு தம்பதிகளுக்கும் கவலையை கொடுத்திருக்கு.

அப்படி அமெரிக்கால பிறந்தா அங்க குடியுரிமை கிடைக்காத குழந்தைகளுக்கு, இந்தியால குடியுரிமை கிடைக்குமாங்கிற சந்தேகமும் அந்த தம்பதிகளுக்கு வந்திருக்கு. அதனால அவங்க தவியா தவிச்சுட்டு இருக்காங்க. பொதுவா ஏதாவது ஒரு சிக்கல் வந்தா அதுக்கு மாற்று வழியை கண்டுபிடிக்கறதுல நம்ம ஆளுங்க கெட்டிக்காரங்க. இப்ப இந்த விஷயத்துலயும் அப்படி ஒரு மாத்து வழியை அவங்க யோசிச்சு இருக்காங்க. பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன்னயே அமெரிக்கால குழந்தையை பெத்துக்கறதுதான் அந்த மாற்று வழி.

பிப்ரவரி 20-ம் தேதிக்கு பிறந்தாதானே நம்ம குழந்தைக்கு குடியுரிமை பிரச்சினை வரும்னு, இப்ப கருவில் குழந்தையை சுமக்கிற தாய்மார்கள் பலரும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு முன்னயே குழந்தையை பெத்துக்கணும்னு துடிக்கறாங்க. இதுக்காக மருத்துவமனைகளை தொடர்புகொண்டு முன்கூட்டியே அறுவைச் சிகிச்சை மூலமா தங்களுக்கு பிரசவம் நட்த்தச் சொல்லி கெஞ்சிட்டு இருக்கறதா அமெரிக்கால இருந்து தகவல்கள் வருது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை கோர முடியாதுங்கிற அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருக்கு. அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான அதிபரோட உத்தரவை அமல்படுத்த வேண்டாம்னு அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கு. இப்போதைக்கு அது இந்தியர்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்திருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...