எச்.வினோத் இயக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர அரசியலில் ஈடுபடபோகிறார் விஜய். அவர் இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார் சிவகார்த்திகேயன். அதற்கான வேலைகளை செய்கிறார். அதற்கு ஏற்ப படங்களில் நடிக்கிறார். அதேநேரம் சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க, பலர் போட்டியிடுகிறார்கள். கவின், மணிகண்டன் ஆகியோர் அந்த போட்டியில் முன்னணி இருக்கிறார்கள்.
ஜெய்பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களுக்குபின் மணிகண்டன் இப்போது குடும்பஸ்தன் என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் வெற்றி, அவர் சிவகார்த்திகேயன் இடத்துக்கு செல்ல தகுதியானவரா என்பதை தீர்மானிக்கும். அந்த படம் வெற்றி பெற்றால் அவர் போட்டியில் சேருவர். கவின் கடைசியாக நடித்த ப்ளடிபெக்கர் சரியாக போகவில்லை. மணிகண்டன் வெற்றி பெற்றால் அவர் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் கோலிவுட்டில்.
குடும்பஸ்தன் விழாவில் பேசிய மணிகண்டன் ‘‘இந்த பட இயக்குனர் எனக்காக இரண்டரை ஆண்டுகள் காத்திருந்தார். முன்பே கதை சொன்னாலும், ‘குட்நைட்’,’லவ்வர்’ படங்களை முடித்துவிட்டுதான் இந்த படத்துக்கு வந்தேன். நான்தான் நடித்தாக வேண்டும் என காத்திருந்தனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள். முதலில் இயக்குனர் என்னை வைத்து ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். இந்த படக்கதை பார்வையாளர்களுக்கு பல வழியில் கனெக்ட் ஆகும். இதில், என் சகோதரி கணவராக குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். அவர் கதைநாயனாக நடித்த ‘பாட்டல் ராதா’ படமும் இந்த வாரம் வருகிறது. என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இந்த பட இயக்குனரும் ஒருவர். படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான் அந்த சண்டை. அதை சரியான விதத்திலும் அவரும் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. ’’ என்றார்.