‘முனி’, ‘காஞ்சனா’, ‘சந்திரமுகி’ போன்ற படங்கள் பேய் கதையில் காமெடி என்ற புதிய ஜானரை உருவாக்கியது. இந்த படங்கள் வெற்றி பெற, இதே பாணியில் பல படங்கள் வந்தன. அந்தவகையில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், அஞ்சல்சிங் நடிக்க ‘தில்லுக்கு துட்டு’ படம் 2016ம் ஆண்டு வெளியானது. பேய், காமெடி ஜானர் வெற்றி பெறவே, இதே கூட்டணி ‘தில்லுக்கு துட்டு’2வை 2019ல் ரிலீஸ் செய்தது. அதில் சந்தானம் ஜோடியாக ஸ்ரீதா நடித்தார். பின்னர், 2023ம் ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் வெளியானது. இது தில்லுக்குதுட்டு பார்ட்3. சில தயாரிப்பு, லீகல் பிரச்னைகள் காரணமாக தில்லுக்குதுட்டு தலைப்பை சந்தானம் பயன்படுத்த முடியாமல் போக, அதன் ஆங்கில வார்த்தையில் இருந்து முதல் எழுத்தை எடுத்து டிடி ரிட்டன்ஸ் என்ற விவரமாக தலைப்பு வைத்தார் சந்தானம். அந்த படமும் வெற்றி பெற்றது. ஆனால், அந்த படத்தை ராம்பாலா இயக்கவி்ல்லை. பிரேம்ஆனந்த் இயக்கினார். அந்த படமும் வெற்றி.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால், அதன் அடுத்த பாகத்தை எடுக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி பல படங்கள் வந்தன. தில்லுக்குதுட்டு 3 பாகமும் வெற்றி பெற்றதால், இ்ப்போது 4வது பாக அறிவிப்பை வெளியிட்டு்ள்ளார்கள். சந்தானம் பிறந்தநாளான நேற்று தில்லுக்குதுட்டு4 பாகம், டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற பெயரில் உருவாகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் நேற்று வெளியானது.இந்த படத்தை டிடி ரிட்டன்ஸ்சை இயக்கிய பிரேம்ஆனந்த் இயக்குகிறார்.படத்தை நடிகர் ஆர்யாவும், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன
நடிகர் சந்தானமும், ஆர்யாவும் பல ஆண்டுகளாக நண்பர்கள், பாஸ் என்ற பாஸ்கரன் உட்பட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில், இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆர்யாவிடம் ஒப்படைத்து இருக்கிறார் சந்தானம்.