காமெடியனாக இருந்த சூரி, கதைநாயகன் ஆனபின் நடித்த ‘விடுதலை’, ‘ கருடன்’படங்கள் வெற்றி பெற்றன. ‘விடுதலை2’ படமும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டது. அவர் நடித்த ‘கொட்டுக்காளி’ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்போது ‘ மாமன்’ என்ற படத்தில் கதைநாயனாக நடித்து வருகிறார் சூரி.
திருச்சி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகி வெற்றி பெற்ற ‘விலங்கு’ என்ற வெப்சீரியலை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் மாமனை இயக்குகிறார். ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி,சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உட்பட பலர் நடிக்க, ஹேஷமாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
தலைப்பே மாமன் என்பதால் இது தாய்மாமன் சம்பந்தப்பட்ட கதையா என்று இயக்குனரிடம் கேட்டால் ” ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசுகிறது. இந்த கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் படப்பிடிப்பு நடக்கிறது. கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் என்கிறார். இதற்கடுத்து, மீண்டும் விடுதலையை எடுத்த படக் கம்பெனிக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். அந்த படத்தை ‘செல்பி’இயக்குனர் மதிமாறன் இயக்குகிறார். தவிர, இன்னும் சில படங்களில் நடிக்க சூரி தயாராக இருக்கிறார்
2025ம் ஆண்டை பொறுத்தவரையில், ராம் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள ‘ஏழுகடல் ஏழுமலை’, ‘மாமன்’ , மற்றும் ‘மதிமாறன்’ படங்கள் பட வாய்ப்பு இருக்கிறது. அவர் கதை நாயகன் ஆனபின் காமெடிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்கவில்லை. சீரியஸ் படங்களில் நடிக்கிறார். அவர் காமெடி படம் பண்ண வேண்டும் என்று பலர் விரும்புவதால், பக்கா காமெடி படம் ஒன்றிலும் நடிக்க தயாராகி வருகிறாராம். அதேசமயம், சந்தானம் பாணியில் இனி காமெடியனாக நடிப்பது இல்லை. கதைநாயகனாக மட்டுமே தொடர்வது என்றும் முடிவெடுத்து இருக்கிறாராம்.