ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் இருவரும் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். ரவி மோகன் கர்நாடகாவில் தனது நண்பர்கள் மற்றும் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார். அதே சமயம் நித்யா மேனன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் நித்யா மேனன் டெஸ்ட்டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். ஆனால் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கும் ரவி மோகனின் ஸ்பேம்மில் இருந்து அந்த குழந்தை பிறக்கிறது. இதன் பிறகு என்ன ஆனது என்பதே காதலிக்க நேரமில்லை படத்தில் கதை.
நாடு முழுவதும் செயற்கை முறையில கரு உண்டாகும் மையப்ங்கள அதிகமாக இருப்பது குறித்து பேசப்பட்டவுடன் இது பரபரப்பான கண்டெண்ட் ஆக இருக்கும் என்று நினைத்தால் கதை வேறு வழியில் போக ஆரம்பித்து விட்டது. ரவி மோகன் இயல்பாக தனது முக பாவங்களால் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார். குழந்தையை மகிழ்விக்கவும், அவரை ஊக்கப்படுத்தவும் ரவி செய்யும் சேட்டைகள் அனைத்தும் ரவிக்குபடி இருக்கிறது.
ஆனால் கதாநாயகியாக முதலில் அறிமுகம் ஆகிறார் நித்யா மேனன். அவரது பாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அப்பா மனோ, அம்மா லட்சுமி ராம்கிருஷ்ணனிடம் கர்ப்பமாக இருப்பதை தெரிவிக்கும் இடம் கலாட்டாவாக இருக்கிறது. இந்தத் தலைமுறையிடம் குழந்தை பிறப்பும், ஆண். பெண் உறவுக்குள் இருக்கும் யாதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது.
முதல் காட்சியிலேயே விந்து வங்கி குறித்து கலாட்டாவாக படம் தொடங்குகிறது. ரவி இயல்பாக மகனுடன் நட்பு கொள்ளும் காட்சி கவிதை. நித்யா மேனன் ரவி மீது காதல் கொள்ளும் காட்சி அழகாக இருக்கிறது. முதல் பாதியில் இல்லாத விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இருக்கிறது. நுட்பமான மன உணர்வுகளை வெளிடுப்பதும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கிருத்திகா உதய நிதி இயக்குனராக இருப்பதைவிட நல்ல நாவல் எழுதும் கதாசிரியராக இருக்கிறார். மென்மையான கதைக்களத்தை கவித்துவமாக கையாண்டிருப்பது சிறப்பு.
படத்தில் பல முக்கியமான விஷயங்களை பற்றியும் பேசியுள்ளார். கே ரிலேஷன்ஷிப், குழந்தை வேண்டாம் என்று ஆண்கள், தனது குழந்தைக்கு அப்பாவை வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள் என இன்றைய சமுதாயத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை பற்றி பேசியுள்ளார். ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது. கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு படத்தில் காட்சிகளை இதமாக பதிவு செய்திருக்கிறது.