பொங்கலுக்கு வெளியாக வேண்டிய, அஜித்தின் விடாமுயற்சி அன்றைய தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு, மோசமான சூழ்நிலை, பைனான்ஸ் பிரச்னை, வேறு சில பஞ்சாயத்து என பல காரணங்கள் சொல்லப்பட்டன. எது உண்மை என்பதை முக்கியமான படக்குழுவினர் மற்றும் அஜித் மட்டுமே அறிவார்கள்.
திட்டமிட்ட நாளில் விடாமுயற்சி வராத கோபத்தில் இருந்தனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில், அவர்களை குஷிப்படுத்தும்வகையில் நேற்று மாலை விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதற்கு ஓரளவு நல்ல வரவேற்பு. டிரைலர் காட்சிகளை பார்த்தவர்கள் இது பக்கா ஆக்ஷன் படம் என்பதை புரிந்துகொண்டனர். அஜித்தின் மனைவியான திரிஷாவை, அர்ஜூன் டீம் கடத்துகிறது. அஜித் எப்படி அவரை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை என்று பல காலமாக பேசப்படுகிறது. ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவல்தான் இந்த கதை என்றும் கூறப்படுகிறது.
சரி, டிரைலர் வெளியாகிவிட்டது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது லட்சக்கணக்கான அஜித் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இதே கேள்வியை படக்குழுவிடம் கேட்டால், ‘‘இந்த கேள்வியை நாங்கள் பல மாதங்களாக கேட்டு வருகிறோம். கடந்த ஆண்டே படம் வெளியாகி இருக்கணும். சில காரணங்களால் படப்பிடிப்பு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் பாக்கி இருந்தது. அடுத்து பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. ஜனவரி 24-ல் படம் வெளியாக வாய்ப்பு என்று கூறப்பட்டது. இப்போதைய நிலவரத்தை பார்த்தால் அதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை’’ என்கிறார்கள்.
படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம், இப்போது பிப்ரவரி 6-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாமா என்று யோசிக்கிறதாம். பிப்ரவரி மாதம் பெரிய படங்கள் இல்லாத நிலையில், விடாமுயற்சியை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டம் போடுகிறதாம். இந்த தேதியை விட்டால் மார்ச்சில் ரிலீஸ் செய்ய முடியாது. பரீட்சை சீசன் தொடங்கிவிடும். தியேட்டருக்கு ஆள் வருவது கடினம். ஏப்ரல் மாதம் 10ம் தேதி அஜித்தின் இன்னொரு படமான குட்பேட்அக்லி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, பிப்ரவரி 6ம் தேதி என்பது சரியான தேதிதான். அந்த சமயத்திலாவது குழப்பம், பிரச்னைகள் இல்லாமல் படத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம் என்று படதயாரிப்பு நிறுவனத்தில் குரல்கள் கேட்கிறதாம்