நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிக்கும் டிரைன் மற்றும் ஆறுமுககுமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஏஸ் படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர். பன்பட்டர்ஜாம் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் விஜய்சேதுபதி. அவர்களுக்கு விஜய்சேதுபதியை வாழ்த்தியுள்ளனர்.
2024ம் ஆண்டை பொறுத்தவரையில் விஜய்சேதுபதிக்கு ராசியான ஆண்டாக அமைந்தது. தொடர் தோல்விபடங்கள் கொடுத்து வந்த அவருக்கு மகாராஜா வெற்றி படமாக வந்தது. அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியதுடன், சீனாவிலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலை2 படமும் வெற்றி பெற்றது. சமீபத்தில் அந்த படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது. கடந்த ஆண்டு அவர் சின்னத்திரையில் நுழைந்து வெற்றி பெற்றார்.
2025ம் ஆண்டை பொறுத்தவரையில் விஜய்சேதுபதி நடித்த ஏஸ், டிரைன் ஆகிய படங்கள் வருவது உறுதியாகி உள்ளது. அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜிதரணிதரன் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் பாலாஜிதரணிதரன் படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பல படங்களில் அவர் கவரவ வேடத்தில் நடித்தார். தெலுங்கு, இந்தியில் நடித்தார். அதனால், அவரின் சில தமிழ் படங்கள் தோல்வி அடைந்தன. அதை உணர்ந்துகொண்டு, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்தார். தெலுங்கு, இந்தியில் அழைத்தும் செல்லவில்லை. அந்த பாலிசியை இந்த ஆண்டும் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.