No menu items!

நேசிப்பாயா – விமர்சனம்

நேசிப்பாயா – விமர்சனம்

ஹீரோ ஆகாஷ் முரளி தொலைக்காட்சி பார்க்கும் பொழுது தன்னுடைய காதலி அதிதி ஷங்கர் போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதைப் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார். போன இடத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தன் காதலியை சந்திக்கிறார். இருவருக்கும் எப்படி காதல் வந்தது? ஏன் பிரிந்தார்கள் ? அதிதி என்ன குற்றம் செய்தார் என்பதை யூத்புல்லான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு வரதன்.

ஒரு ஹீரோவுக்கும் இருக்கும் ஓப்பனிங் போல விஷ்ணு வரதன் திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை அவர் நிறைவேற்றியிருக்கிறாரா என்றால் பாதிகிணறு தாண்டிய கதைதான். ஆகாஷ் முரளி நெடு நெடுவென்று வளர்ந்து நன்றாக சண்டை போடுகிறார். அதிதிக்கு இணையாக ரொமாண்டிக் மூடுக்கு வந்து காதல் செய்வதில் கொஞ்சம் பயிற்சி வேண்டும். அதிதி கொஞ்சம் நடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆகாஷ் மீது வெறுப்பைக் காட்டுவது முதல் காதலை நினைத்து கலங்குவது வரைக்கும் அவர் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சரத்குமார், குஷ்பூ ஆகியோர் மனதை கவரும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

தனக்கே உரித்தான வகையில் காதல் காட்சிகளை மிகவும் இளைமை துல்லளோடு பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிப்படுத்திய விஷ்ணுவரதன் வழக்கு ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்து பார்ப்பவர்களுக்கு போர் அடிக்காமல் செய்திருக்கிறார். அதேபோல் திரைக்கதையிலும் எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாத படி செய்து ரசிக்க வைத்து இருக்கிறார். இருந்தும் கதையும் கதாபாத்திரமும் கதைக்கான காரணமும் ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து பழகிய ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு செய்திருப்பது மட்டும் கிளிஷே காட்சிகளாக இருக்கிறது. கல்கி கோச்சலின் வழக்கறிஞராக வந்து மனதில் நிறைகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் வழக்கம்போல். இந்தப் படத்திற்கு இவர் பக்கபலமாக இசையமைத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி செய்திருக்கிறது. கேமரூன் எரிக் ப்ரெசென் ஒளிப்பதிவில் ஃபாரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டம். அதேபோல் காதல் காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்.

படத்தின் கதைக்களமாக போர்ச்சுகல் நாட்டை வைத்திருப்பது கொஞ்சம் பலமாக இருந்தாலும் அங்கு போவதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. மற்றபடி ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக வந்திப்பது இளம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நேசிப்பாயா – நேசிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...